பக்கத்து இலைக்கு பாயாசம்.. சிவகார்த்திகேயனை பங்கமாக கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஜனவரி 10ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பேசிய சிவகார்த்திகேயன் இது அண்ணன் , தம்பி பொங்கல் தான் கூறியதை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக கிண்டலடித்துள்ளார்.
சென்னை சாய் ராம் கல்லூரியில் பராசக்தி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன் என்ற பெயரே மிகுந்த வலிமையான பெயர். அந்த பெயருக்கு , இந்த படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்குள் டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. இந்த படத்தில் பணியாற்றியதன் மூலம் சுதா மேடமிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது கடுமையான உழைப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு என்றார்.

சிவகார்த்திகேயன் பேச்சு: அமரன் திரைப்படம் வெளியாகும் போது அவர்களுக்கு ஆதரவான படம் என்றார்கள், பராசக்தி திரைப்படம் வெளிவரும்போது இவர்களுக்கான ஆதரவான திரைப்படம் என சொல்கிறார்கள். நான் யாருக்கும் ஆதரவானவன் இல்லை. அனைத்து கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்கு ஆதரவானவன் நான் நடித்துக்கொண்டே இருப்பேன். ஜனநாயகன் படத்துடன் மோதுவது பற்றி பேசிய சிவகார்த்திகேயன், 33 வருஷமா ஒரு மனுஷர் நம்ம அனைவரையும் எண்டர்டெயின் பண்ணிருக்கார். அதனால ஜனவரி 9ந் தேதி ஜனநாயகன் பாருங்க, ஜனவரி 10ந் தேதி பராசக்தி பாருங்க. செலிபிரேட் பண்ணுங்க. யார் என்ன வேணாலும் சொல்லட்டும். நான் சொல்றேன். இது அண்ணன் - தம்பி பொங்கல் தான் என்று சிவகார்த்திகயேன் பேசினார்.
பக்கத்து இலைக்கு பாயாசம்: சிவகார்த்திகேயன் இது அண்ணன் , தம்பி பொங்கல் தான் கூறியதை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்ட திடீர் தளபதி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பலரும் வரவேற்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இணையவாசி ஒருவர் பாயசம் மட்டும் இல்லை வெத்தலை சுண்ணாம்பு போட்டு சிவக்க வச்சிடுவோம் என்றும் மற்பொருவரும் சரியான அணுகுமுறை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











