வலிமை, பீஸ்ட் பிளாப்.. லிஸ்ட் போட்டு சொன்ன ப்ளூ சட்டை மாறன்..அடுத்த பஞ்சாயத்து!

சென்னை : திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஹிட்டான மற்றும் பிளாப்பான படங்களின் லிஸ்ட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் என்ற பெயரை கேட்டதுமே நம்ம கோலிவுட் வட்டாரத்தில் இருப்பவர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தின் படம் என்றாலும் சரி, அறிமுக ஹீரோவாக இருந்தாலும் சரி விமர்சனம் என்ற பெயரில் சும்மா வெச்சி செய்துவிடுவார்.

இவர் பேசுவதை பார்க்கும் போது ரொம்ப அமைதியாக இருக்குற மாதிரித்தான் தெரியும் ஆனால், இவர் பேசுவதை காது கொடுத்து கேட்டால், காதில் ரத்தம் வராத குறையாக கிழித்து தொங்கவிட்டுவிடுவார். இப்படி பேசியே பாப்புலர் ஆனவர் தான் ப்ளூ சட்டை மாறன்.

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

ஒரு படத்தை விமர்சனம் செய்வது ஈஸி, படத்தை எடுத்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. ஆன்டி இண்டியன் படத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவே வியந்து பாராட்டி இருந்தார்.

பிளாப் மூவிஸ்

பிளாப் மூவிஸ்

இதையடுத்து தனது விமர்சகர் வேலையை தொடர்ந்து செய்து வரும் ப்ளு சட்டை மாறன் தற்போது, ஹிட் மற்றும் பிளாப்பான திரைப்படம் குறித்து ஒரு லிஸ்டை பதிவிட்டுள்ளார். தோல்வி அடைந்த பட லிஸ்டில் முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த,பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், சுல்தான், விஷாலின் இரும்புதிரை படத்திற்கு பிறகு தொடர்ந்து 6 படங்கள் பிளாப் என்று கூறியுள்ளார்.

ஹிட் மூவிஸ்

ஹிட் மூவிஸ்

மேலும், பாக்ஸ் ஆபிசில் கல்லாக்கட்டி பட வரிசையில் கமல்ஹாசன் நடித்த விக்ரம், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான், சிலம்பரசன் நடித்த மாநாடு, தனுஷ் நடத்த கர்ணன் படத்தை வெற்றி பெற்ற படங்கள் என கூறியுள்ளார். முன்னணி நடிகர்களை விமர்சிப்பதனால் இவருக்கு சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் இருந்து அவ்வப்போது மிரட்டல்களும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.

Recommended Video

Yaanai | திரையரங்கிற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட Arun Vijay *Kollywood | Filmibeat Tamil
அடுத்த பஞ்சாயத்து

அடுத்த பஞ்சாயத்து

இதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாத அவர் தொடர்ந்து எடக்கு முடக்கான விமர்சனத்தை செய்து வருகிறார். சமீபத்தில், அஜித்தின் வலிமை படத்தை கடுமையாக விமர்சித்து இருந்த ப்ளூ சட்டை, அவரின் தோற்றம் குறித்தும் அவரின் டான்ஸ் குறித்தும் கேலியாக பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அண்ணாத்த, வலிமை படத்தை பிளாப் எனக் கூறி அடுத்த பஞ்சாயத்தில் சிக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X