அஜித், கமல் அடுத்து விஜய்யிடம் வம்புக்கு போகும் புளூ சட்டை மாறன்..செம்ம சம்பவம் இருக்கு

சென்னை : நடிகர் விஜய் மற்றும் கமல் இருவரும் தமிழ் சினிமாவின் சிறப்பான ஆளுமைகளாக இருக்கின்றனர். ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய் அந்த இடத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.

கமல் ஹாசன் தற்போது தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார். விரைவில் விஜய்யை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக கமல் ஹாசன் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

அதுகுறித்த செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில் கமல் அளித்த பேட்டி ஒன்றை மேற்கோள் காட்டி விஜய்யை வம்பிழுத்துள்ளார் புளூ சட்டை மாறன்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே வாரிசு படத்தின் சூட்டிங்கில் இணைந்தார். குடும்ப சென்டிமெண்ட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரித்து வருகிறார்.

விறுவிறு சூட்டிங்

விறுவிறு சூட்டிங்

படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. மழை உள்ளிட்ட காரணங்களால் இடையில் படப்பிடிப்பு சிறிது தடைப்பட்டது.

தளபதி 67வில் இணையும் விஜய்

தளபதி 67வில் இணையும் விஜய்

பொங்கல் ரிலீசாக இந்தப் படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைய விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

கமல் தயாரிப்பில் விஜய்

கமல் தயாரிப்பில் விஜய்

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் படங்களை அறிவித்துவரும் நடிகர் கமல்ஹாசன், விரைவில் விஜய்யை வைத்தும் படம் தயாரிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் நடிப்பு குறித்து பேசிய கமல்

விஜய் நடிப்பு குறித்து பேசிய கமல்

இந்நிலையில் எப்போதும் எடக்கு மடக்கு வேலையை செய்யும் விமர்சகர் மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தற்போது விஜய் குறித்து கமல் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். அந்த வீடியோவில் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், விஜய் ஒரு நல்ல சினிமா பண்ண வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட வீடியோ

ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட வீடியோ

ஒரு ரசிகனாக சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களும் நல்ல சினிமாவை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் விஜய்யும் அதேபோல நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் கமல் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவில் கமலின் இந்த கமெண்ட்டிற்கு விஜய் அழுவது போன்று அவரது படங்களில் இருந்து காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அஜித்தை தொடர்ந்து விஜய்

அஜித்தை தொடர்ந்து விஜய்

தொடர்ந்து அஜித் உள்ளிட்ட பலரை வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். தற்போது அவரது லிஸ்ட்டில் விஜய் சேர்ந்துள்ளார். இதனால் அவர் விஜய் ரசிகர்களின் வெறுப்பையும் கண்டனத்தையும் சம்பாதித்துள்ளார். தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரை திட்டி கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X