2 ஆயிரம் கோடி 20 பைசா.. 2 வாரத்தில் படுத்து விட்ட ஜெயிலர் வசூல்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட வீடியோ மீம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் வசூல் வேட்டை நடத்திய நிலையில், 2ம் வாரத்தில் வசூல் அதிரடியாக குறையத் தொடங்கியது.

375 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ் 400 கோடி வசூல் எட்டியதை கூட அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

Blue Sattai Maran shares a troll video meme for fake Jailer Box Office

ஆனால், பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரான மனோபாலா விஜய பாலன் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த் மற்றும் மனோபாலாவை கலாய்க்கும் விதமாக வீடியோ மீம் ஒன்றையே போட்டு பங்கம் பண்ணியுள்ளார்.

575 கோடி வசூல்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 15 நாட்களில் ஒட்டுமொத்தமாக 575 கோடி வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருப்பதாக மனோபாலா பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பதிவிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

375 கோடிக்கு மேல் வசூல் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனமே வாய் திறக்காமல் உள்ள நிலையில், மனோபாலா மட்டும் தொடர்ந்து 400, 500 என அடுத்து 600 கோடியை தாண்டி விடுவார் போல இருக்கே என நினைத்த ப்ளூ சட்டை மாறன் மனோபாலாவையும் ரஜினியையும் கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோ மீமை போட்டுள்ளார்.

கபாலி - பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்: கபாலி என ரஜினிகாந்தையும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் என மனோபாலாவையும் மரண கலாய் கலாய்த்துள்ள ப்ளூ சட்டை மாறன் வடிவேலு, பார்த்திபன், பயில்வான் ரங்கநாதனும் நடித்த காமெடி காட்சியை வைத்து வீடியோ மீமையே போட்டு மெர்சல் காட்டி உள்ளார்.

ஒரிஜினல் வசூலை விட ஓவராக ஹைப் ஏற்றுகிறேன் என்கிற பெயரில் ஜெயிலர் வசூலை இஷ்டத்துக்கு ஏற்றி விட்டு நடிகருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி வருகின்றனர் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் என ட்ரோல் செய்துள்ளார். அந்த வீடியோ மீமை பார்த்த ரசிகர்கள் 1000 கோடி வரை போகும்னு நினைக்கிறோம் என கமெண்ட் போட்ட நிலையில், 2 ஆயிரம் கோடி 20 பைசா என கமெண்ட் போட்டும் வறுத்தெடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X