அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. ரஜினி முதல் ராம்சரண் வரை பங்கேற்பு.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி (நாளை) கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலர் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக பல பிரபலங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை பலர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அயோத்திக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் யார் யார் எல்லாம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்ல உள்ளனர் என்கிற லிஸ்ட்டை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

Blue Sattai Maran shares celebrities list who will attend Ayodhya Ram Temple grand opening ceremony

அயோத்தியில் வீட்டு மனை வாங்கிய அமிதாப் பச்சன்: ராம பக்தரான அமிதாப் பச்சன் அயோத்தியில் உள்ள சராயு எனும் பகுதியில் சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை ஒன்றை வாங்கி உள்ளார். அதன் மதிப்பு மட்டும் 14.5 கோடி ரூபாய் என்கின்றனர். வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், முன்னதாகவே அந்த புண்ணிய பூமியில் மனை ஒன்றை வாங்கிப் போட்டிருக்கிறார் அமிதாப் பச்சன். அவரை போல, மேலும் சில பிரபலங்களும் வீட்டு மனை வாங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

ரஜினிகாந்த் முதல் ராம்சரண் வரை: "அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள்: அமிதாப் பச்சன், கங்கனா ரனவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன், அனுபம் கெர், சன்னி தியோல், மோகன்லால், ரிஷப் ஷெட்டி, யஷ், ராம்சரண், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், தனுஷ். காமடி நடிகர் சதீஷ், பாடகர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள்: மேலும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்டு இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இவர்கள் மட்டுமின்றி இன்னும் பெரிய லிஸ்ட்டே நாளை அயோத்திக்கு படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X