கமல் பேச்சை சுட்டிக் காட்டி பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்.. அஜித்தும் சிக்கிட்டாரு!

சென்னை: என் காயங்களை காட்டி பிச்சைக்காரன் போல சம்பாதிக்க மாட்டேன், நல்ல படம் கொடுத்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியை சுட்டிக் காட்டி இரவின் நிழல் படத்தை இயக்கிய பார்த்திபனை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

சினிமா விமர்சகரும் ஆன்டி இண்டியன் படத்தின் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் இந்த வாரம் வெளியான படங்களில் ஏதும் பெரிதாக டிரெண்டிங் கன்டென்ட் கிடைக்காத நிலையில், மீண்டும் பார்த்திபன் உடனே சண்டைக்கு சென்றுள்ளார்.

கமல் பேசிய அந்த பேட்டி வீடியோவை போட்டு ஏற்கனவே விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வம்பிழுத்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கும் கீழ் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை பயங்கரமாக வெடித்துள்ளது.

டிரெண்டாகும் கமல் பேச்சு

டிரெண்டாகும் கமல் பேச்சு


விக்ரம் வெற்றியின் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனை இயக்க ஏகப்பட்ட இயக்குநர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதில், எனக்கு இடுப்பு வலிச்சது, வியர்த்தது, காலில் அடிபட்டுருச்சுன்னு ஆடியன்ஸ் கிட்ட ஒரு நடிகர் சொல்லக் கூடாது எனக் கூறியுள்ளார்.

பிச்சை எடுக்கக் கூடாது

பிச்சை எடுக்கக் கூடாது

மேலும், எனக்கு கால் ஒடஞ்சி இருந்தாலும், நல்லா ஆடுறேனா என்பதை தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரனை போல, எனக்கு காலில் இந்த இடத்துல அடிபட்டு இருக்குன்னு என் புண்ணை காட்டி காசு வாங்க மாட்டேன், என் திறமையை காட்டி காசு வாங்கணும் என கமல் பேசிய அந்த பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை

பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை

இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் ஷிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் எனக் கூறி பார்த்திபன் படத்தை வெளியிட்ட நிலையில், அது பொய்யான தகவல் என்றும் பார்த்திபன் மக்களை ஏமாற்றுகிறார் என்றும் தொடர்ந்து ஒரு வாரம் மூச்சுப்புடிக்க பேசி வீடியோவை எல்லாம் போட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் இந்த வீடியோவை ஷேர் செய்து மீண்டும் வம்பிழுத்துள்ளார்.

கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன்

கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன்

"கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கைப்படம் தருவதை விட இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது World's 1st, கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன், 24 Hrs தூங்கவில்லை என்று அனுதாபம் தேடும் அறிவுஜீவிகளுக்கு சிறப்பாக பொருந்தும். Practical and frank statement by Kamal." என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.

அஜித் சிக்கிட்டாரு

அஜித் சிக்கிட்டாரு

கமல் பேசிய அந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து பார்த்திபனை ஓட்ட நினைத்த நிலையில், விஜய் ரசிகர்கள், அப்படி செய்றது அஜித் தான் என ட்ரோல் செய்து வருகின்றனர். வலிமை படத்தின் புரமொஷனுக்காக அந்த பைக் ஆக்ஸிடன்ட் வீடியோவ படக்குழுவே வெளியிட்டதாக விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் மீண்டும் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை கமலின் இந்த பேட்டி வீடியோவை வைத்து பெரியளவில் கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X