என்ன கொடுமை சார் இது.. இயக்குநரே 15 டிக்கெட் வாங்குறேன்னு சொல்லியும் அந்த படத்தை போடலயாம்!

சென்னை: தியேட்டரில் வெளியாகும் படங்கள் அனைத்து நடிகர்களுக்குமானதாக இல்லாத நிலை உருவாகி விட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுக்கான இடமாக மாறி வருகிறது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் விருதுகளை வென்ற தரமான படங்களையும் தியேட்டரில் திரையிட்டால் கூட மக்கள் அதனை பார்க்க வருவதில்லை.

Blue Sattai Maran shares Kidaa Director Ra Venkat statement about show cancel at Kasi theater

இந்நிலையில், கிடா படத்தின் இயக்குநர் 15 டிக்கெட்டுகள் வாங்குகிறேன் ஷோவை போடுங்க என சொல்லியும் காசி தியேட்டர் போடவில்லை என கிடா படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் புலம்பி போட்ட ட்வீட்டை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.

கிடா இயக்குநர் உருக்கம்: ”இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள்.. கூடவே ஒரு எட்டு பேரும் கிடா படத்திற்கு டிக்கெட் எடுக்க வந்திருக்கிறார்கள். ஆனால் தியேட்டர் நிர்வாகம் 15 பேர் வந்தால்தான் தான் படம் போட முடியும் எனக்கு கூறி இருக்கின்றனர். நண்பர்கள் பரவாயில்லைங்க 15 டிக்கெட் தானே நாங்களே இன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் ஷோ கேன்சல்.. எங்கோ ரிவ்யூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்க கிட்ட என்ன பதில் சொல்றதுன்னும் எனக்கு தெரியல.. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனால் ஷோ கேன்சல்.. இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தானே சின்ன படங்கள் வருதுன்னு நீங்க சொல்ல வருவது தெரியுது.. ஆனா ஆதங்கத்தை எங்கே கொட்டுறது.. அதான் இதை ஷேர் பண்ணேன்.. மதுரையில ஒரு ஷோதான் கொடுத்தாங்க.. அங்கேயும் இப்ப ஷோ காட்டல.. மக்களே உங்களின் அருகில் ஏதாவது ஒரு ஷோ ஓடினால் போய் பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: ”Ra.Venkat - Director of critically acclaimed film Kida writes about show cancellation in Kasi Talkies, Chennai.

The director said he is willing to buy 15 tickets. Still the theatre management refused to play the show.

ஜப்பான், ஜிகர்தண்டா போன்ற படங்களின் ஹூரோ கார்த்தி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் லாரன்ஸ் போன்றோருக்கு பால்கனி முழுக்க புக் செய்து படம் பார்க்க வைக்கும் காசி தியேட்டர், குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உள்ள இதே சென்னையில்தான்...

சிறிய பட்ஜெட்டில் எடுத்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற இயக்குனரை படம் பார்க்க விடாத கொடுமையும் நடக்கிறது.

ஜிகர்தண்டாவை பல் இளிக்க பாராட்டிய ஒரு சினிமா பிரபலமும் இதுபற்றி வாய் திறக்காமல்.‌ தீபாவளி பலகாரத்தை அப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் போன்றோரின் ட்விட்டர் ஐடி மட்டுமே தெரியும்.

ரா.வெங்கட்டின் ஃபேஸ்புக் ஐடி தெரியாததில் ஆச்சர்யம் இல்லை.

தரமான சிறிய படங்களை அழிக்க வெளியில் இருந்து ஆட்கள் வரவேண்டாம். இவர்களே போதும்.

குறைந்தபட்சம் எத்தனை டிக்கட் வாங்கினால் ஷோ போடப்படும் என்பதை தியேட்டர் கவுண்ட்டர் மற்றும் ஆன்லைன் புக்கிங்கில் வைத்து தொலையவும். நேரமாவது மிச்சமாகும்.

15 பேருக்கு டிக்கட் எடுக்கிறேன் என்று சொன்னபிறகும் ஷோ கேன்சல் செய்வது கொழுப்பின் உச்சம்.

இந்த லட்சணத்தில் சிறிய படங்கள்தான் எங்களை வாழ வைக்கிறது என பீத்தலாக பேட்டி தந்து வருகிறார் பருப்பூர் சுப்ரபணியம்.

வாயை தொறந்தா பொய் மட்டும்தான் பேசுறது‌.‌.. ” என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார். ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கே 8 பேர் கூட வரவில்லை என்பதால் ஷோ கேன்சல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X