அடியாத்தி.. என்ன லியோ ஹைனாலாம் பேட்டி கொடுக்குது.. இன்னும் என்னலாம் கொடுமையை பார்க்கணுமோ?..
சென்னை: லியோ படத்தில் நடிகர் விஜய் ஹைனா சண்டை போடுவது போன்ற காட்சிகள் டிரைலரில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் இது ஹாலிவுட் படத்தில் தழுவுதல் என கூறப்படும் நிலையில், அந்தப் படத்தில் இது போன்ற காட்சிகள் எல்லாம் கிடையாதே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஹைனா சீன் கற்பனை காட்சியாக இருக்குமா? அர்ஜுன் தான் ஹைனாவா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், ரசிகர்களுக்கு அந்த காட்சியை வெறித்தனமாக கடத்த சுமார் 15 கோடி ரூபாய் செலவில் சிஜியில் அதை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைனாவுடன் விஜய் சண்டை: இதுவரை விஎஃப் எக்ஸ், கிரீன் மேட் மற்றும் ப்ளூ மேட் உள்ளிட்டவற்றை தனது படத்தில் தவிர்த்து வந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் பட்ஜெட் 300 கோடி என்பதால் புகுந்து விளையாடி உள்ளார் என்று தெரிகிறது.
லியோ படத்தில் நடித்த நடிகர்களிடம் யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்து வரும் நிலையில், அந்த ஹைனா விலங்கையும் விட்டு வைக்காமல் பேட்டி எடுக்க போகின்றனர் என மீம்கள் டிரெண்ட் ஆகி வந்த நிலையில், தற்போது ஹைனாவின் பேட்டியே வெளியாகி விட்டதாக வீடியோ ஒன்றை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைனா பேட்டி: அந்த வீடியோவில் ஹைனா அப்படியே பேட்டிக் கொடுப்பது போல நெட்டிசன்கள் சித்தரித்துள்ள வீடியோ ரசிகர்களை குபீரென சிரிக்க வைத்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் நடித்தது ரொம்பவே பெருமையாக உள்ளது என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருக்கும் விஜய் கேமரா ஆன் செய்து ஆக்ஷன் சொல்லி விட்டால் போதும் புலியாக மாறி என்னை புரட்டி எடுத்து விடுவார்.
பதிலுக்கு, நாமும் கடித்து விடலாமா என்று தோன்றும், ஆனால், அப்புறம் மற்றவர்கள் என்னை பொளந்து விடுவார்கள் என்பதால் அமைதியாக நடித்து விட்டு கொடுத்த பேட்டாவை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். பாடல் காட்சிகளில் எல்லாம் எனக்கு வேலை இல்லை, ஆக்ஷன் காட்சியில் மட்டுமே நடித்துள்ளேன். நடிகர் விஜய் சிறந்த நடிகர், ரொம்பவும் அருமையான மனிதர் என ஹைனா பேசுவது போல எடிட் செய்யப்பட்டுள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.
இன்னும் லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்பாக என்ன என்ன அக்கப்போர் எல்லாம் நடக்குமோ என ரசிகர்கள் தலையில் கை வைத்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











