நீங்க எல்லாம் விஜயகாந்த் கூட இருக்கீங்க.. உங்களுக்கு வாய்ப்பு இல்லை.. தெனாவட்டா பேசிய வடிவேலு!
சென்னை: இந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் நடித்து சிறந்த நடிகர் என்கிற பாராட்டுக்களை பெற்றுள்ள வடிவேலு விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்து ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மாறிய வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக படுமோசமான பிரச்சாரம் செய்ததில் இருந்தே இருவருக்கும் இடையே பகை மூண்டது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருந்தாலும், திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலினே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், விஜயகாந்தின் பல படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு ஏன் வரவில்லை என்று கேட்டு வருகின்றனர். மேலும், விஜயகாந்த் ஆட்களுக்கே வாய்ப்புத் தரமாட்டேன் என வடிவேலு சொன்னதாக மீசை ராஜேந்திரன் பேசிய வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.

விஜயகாந்தை பார்க்க வராத வடிவேலு: விவேக், மயில்சாமி, போண்டா மணி என சினிமா பிரபலங்களின் மரண நிகழ்வுகள் என்றாலே வடிவேலு தலை காட்டாமல் இருந்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நகைச்சுவையால் பல கோடி மக்களை சிரிக்க வைத்து வரும் மாமன்னன் வடிவேலு இந்த விஷயத்தில் ஏன் சிறு புத்தியுடன் உள்ளார் என்று பலரும் விளாசி வருகின்றனர். சின்னக் கவுண்டர், நரசிம்மா, எங்கள் அண்ணா, தவசி உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு.
வடிவேலு இவ்வளவு மோசமானவரா?: மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், அந்த படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், வடிவேலு மட்டும் வராதது ஏன் என்றும் வந்தால் அடி விழும் என்கிற பயமா என்றும் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், வடிவேலு பற்றி மீசை ராஜேந்திரன் பேசிய த்ரோபேக் பேட்டியை ப்ளூ சட்டை மாறன் போட்டு விளாசி உள்ளார்.

விஜயகாந்த் ஆள் தான நீ: தனுஷின் படிக்காதவன் படத்தில் விவேக் நடிப்பதற்கு முன்பாக வடிவேலு தான் நடித்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றிருந்தேன். என்னை பார்த்ததும் விஜயகாந்த் ஆள் தானே நீ.. உனக்கெல்லாம் சான்ஸே தர மாட்டேன் போ என விரட்டி அடித்தார் வடிவேலு என்றும் தெனாவட்டாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவர் அப்படி பேசினார் என மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் பகீர் கிளப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











