அஜித் - ஷாலினி திருமணம்.. ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்லியிருக்காரு பாருங்க.. வேற லெவல்
சென்னை: ஷாலினியை காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார் அஜித். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் அஜித்துக்கு குடும்பம்தான் எல்லாமே. தனது குடும்பத்தின் மீது அபரிமிதமான காதல் வைத்திருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 10ஆம் தேதி அப்படம் ரிலீஸாகவிருக்கிறது.
சினிமாவில் யாரின் துணையும் இல்லாமல் வந்தவர் அஜித். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை பார்த்தவர் பிறகு மெல்ல மெல்ல முன்னேறினார். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ரொம்பவே திணறிப்போனார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் தன் கையே தனக்கு உதவி என்பதற்கேற்ப ஒவ்வொரு முறை விழும்போதும் தானாகவே எழுந்தார். உழைப்புக்கேற்ற ஊதியமாக ஹிட் படங்கள் கொடுத்து இன்று தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார்.

காதல்: கடைசியாக அவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே காதல் கோட்டையில் நடித்தபோது ஹீராவை அஜித் காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு அமர்க்களம் படத்தில் சரண் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஷாலினி ஹீரோயினாக நடித்தார். ஷாலினி சிறு வயதிலிருந்தே சினிமாவில் கலக்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்க்களம் படத்தில் இருவரும் நடித்தபோது ஷாலினியை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் அஜித்.
காதல் சொன்ன கதை: ஷாலினியிடம் அஜித் காதல் சொன்ன கதையே சுவாரஸ்யமானது. அதாவது படத்தில் ஒரு காட்சியில் ஷாலினியின் கையை கத்தியால் வெட்ட வேண்டும் அஜித். அப்போது தெரியாத்தனமாக நிஜமாகவே ஷாலினியின் கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியது. உடனே ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அக்கறையோடு ஷாலினியை பார்த்துகொண்டார் அஜித். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்த முதல் தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: ஷாலினிக்கும், அஜித்துக்கும் காதல் உருவானதும் ஷாலினியின் வீட்டுக்கு சென்ற அஜித் திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்து நிகில் முருகன் கூறியதாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு ட்ரெண்டாகியிருக்கிறது.
ப்ளூ சட்டை பதிவு: அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அஜித் - ஷாலினி திருமண வரவேற்பில் PRO வாக இருந்தேன். தாஜ் கன்னிமேரா ஹோட்டலில் அந்நிகழ்வு நடந்தது. பொதுவாக. திருமண நிகழ்வுகளுக்கு வரும் வி.ஐ.பிக்களின் கார் ஓட்டுனர்கள் ஹோட்டல் வாசலில் அவர்களை இறக்கவிட்டு.. சாப்பிடாமல் பார்க்கிங் ஏரியாவில் காத்திருப்பார்கள். ஆகவே விஐபிக்கள் காரில் இருந்து இறங்கும் இடத்தில் ஆட்களை நிறுத்தி ஓட்டுனர்களுக்கு பார்சல் உணவு மற்றும் தண்ணீர் தரலாமா என அஜித்திடம் கேட்டேன்.
இது நல்ல யோசனை. நிச்சயம் செய்யுங்கள் என்றார். ஆனால் இதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதி தராவிட்டால் என்ன செய்வது எனக்கேட்டேன். அப்படியென்றால் எந்த ஹோட்டல் அனுமதி தருகிறதோ அங்கு ரிசப்ஷனை மாற்றி விடலாம் என்றார். ஆனால் அந்த ஹோட்டல் அனுமதி தந்தது. ஓட்டுனர்களுக்கு உணவு அளித்தோம் - நிகில் முருகன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











