அட ரஜினி போலவே இருக்காரே.. யாரு இந்த தாத்தா.. தீயாக பரவும் வீடியோ.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!
சென்னை: லியோ படத்தை முதல் நாளே நடிகர் ரஜினிகாந்த் பார்த்தார் என புகைப்படம் ஒன்றை நேற்று சமூக வலைத்தளங்களில் சிலர் அதிகம் ஷேர் செய்தனர். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் போலவே இருக்கும் வயதான நபர் ஒருவரின் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

72 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த் மேக்கப் மற்றும் விக் இல்லாமல் சாதாரணமாக எப்படி இருப்பாரோ அதேபோல அந்த வயதான நபர் இருக்கும் நிலையில், அவருடன் சிலர் பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தை முடித்த நிலையில் அந்த படம் அதிகபட்சமாக 525 கோடி வசூலை ஈட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இதுவரை உள்ளது.
வசூல் போட்டி: தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே உலக அளவில் 145 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 100 கோடி வசூல் எட்டிய நிலையில் அதனை அசால்ட்டாக லியோ தாண்டி இருக்கும் பட்சத்தில் லியோவின் மொத்த வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை கட்டாயம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி மாதிரி: ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஒருவேளை லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை முந்தினால், தலைவர் 170 திரைப்படம் லியோ வசூலை முந்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்கின்றனர்.

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை உலக அளவில் அதிகரித்து வருகின்றனர். இதில், யார் பெரியவர் என்கிற தேவையில்லாத சண்டையை ரசிகர்கள் ஏன் போட வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
டூப்புக்குத்தான் அதிக சம்பளம் தரணும்: ரஜினி போன்ற தோற்றத்தில் இருக்கிறார் ஏதோ ஒரு வயதானவரின் வீடியோவை வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், மேலும், "க்ரீன் மேட்ல நடிச்சி, VFX ல சண்ட போட்டு 100 கோடி, 150 கோடி வாங்கறார். அவருக்கு பேரு தலீவர்.

ஒருத்தர் நிஜத்துல சண்ட போட்டு, அவுட்டோர் எல்லாம் போய் கஷ்டப்பட்டாலும் சம்பளம் 10 ஆயிரம், 20 ஆயிரம்தான். ஆனா அவருக்கு பேரு டூப். டூப் நிரந்தரம்... மக்களுக்கு அல்வா கொடுக்கறோம்." என கலாய்த்து இன்னொரு ட்வீட்டையும் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











