250 ரூபாய் தான் வடிவேலுக்கு சம்பளம்.. விஜயகாந்துக்கு எதிராக பண்ண கேவலமான வேலை.. தியாகு விளாசல்
சென்னை: விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து பல ஊர்களில் இருந்து முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்த வந்துள்ள நிலையில், மன்சூர் அலி கான் எல்லாம் கடைசி வரை விஜயகாந்த் கால் அடிக்கு பக்கத்திலேயே காத்துக் கிடந்தார். ஆனால், விஜயகாந்தால் சினிமாவில் வளர்ந்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு கடைசி வரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே என ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பல ட்வீட்கள் போட்டு வெளுத்து வருகின்றார்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித், சூர்யா, சிம்பு, விஷால், தனுஷ் எல்லாம் நேரில் வரவில்லை என்றாலும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவுண்டமணி, இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: "அற்ப காரணத்திற்காக விஜயகாந்தை எதிர்த்த வடிவேலு:
250 ரூபாய் சம்பளத்திற்கு சின்ன கவுண்டரில் நடிக்க வந்தார் வடிவேலு. விஜயகாந்திற்கு குடைபிடித்தபடி செல்லும் வேடம். அவருக்கு புதிய துணிமணிகளை எடுத்து தந்தான் என் நண்பன் விஜயகாந்த்.
ஒருநாள் விஜயகாந்தின் வக்கீல் இறந்துவிட்டார். அவரது வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே இருந்தது. துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டருகே வண்டிகளை பார்க் செய்திருந்தார்கள்.
இதைக்கூட பொறுத்துக்கொள்ளாத வடிவேலு 'என் வீட்டு பக்கம் ஏன் வண்டியை நிறுத்தறீங்க? வண்டியை எல்லாம் எடுங்க' என கோவமாக சத்தம் போட்டார்.
'ஏம்ப்பா... சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க. அது வரைக்கும் பொறுத்துக்க கூடாதா? இப்படி கொச்சையா பேசறியே... இது நியாயமா?' என விஜயகாந்தின் நண்பர்கள் சிலர் கேட்டனர். ஆனால் வடிவேலு அதை கேட்கவில்லை.
இதனால் அங்கே களேபர சூழல் ஏற்பட்டது.
உடனே எனக்கு போன் செய்து 'விஜயகாந்த் ஆட்கள் என்கிட்ட வம்பு இழுக்கறாங்க' என்று புகார் செய்தார். பிறகு இந்த விஷயம் முதல்வராக இருந்த கருணாநிதியின் காதுக்கும் சென்றது.
விஜயகாந்தை பழிவாங்க திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததற்கு இந்த சம்பவம்தான் காரணம் - நடிகர் தியாகு, விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்." என தியாகு அளித்த பேட்டியை ஷேர் செய்து விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











