Suriya - விஜய்க்கு செந்தூரப்பாண்டி உங்களுக்கு பெரியண்ணா.. சூர்யாவே Ethics தெரியுமா?.. ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த சூர்யா நேரில் வராததால் அவரை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் உங்களுக்கு Ethics தெரியுமா என்றும் சாட்டையடி கேள்வியை எழுப்பி புத்தாண்டை கொண்டாடுங்கள் என்றும் குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு வந்தனர்.

Blue Sattai Maran Slams actor Suriya For Vijayakanth

நல்லடக்கம்: தீவுத்திடலிலிருந்து அவரது உடல் ஊர்வலமாக கோயம்பேடு கொண்டு வரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழையில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்று எழுதப்பட்டிருந்தது.கையில் தேமுதிக கட்சியின் மோதிரத்தோடு அவரது உடல் தேமுதிக கட்சியின் அலுவலகத்திலேயே புதைக்கப்பட்டது.

நடிகர்கள் அஞ்சலி: இதற்கிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது விஜய் உள்ளிட்டோர் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். அதனையடுத்து தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தபோது ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் சூர்யா உள்ளிட்ட சில நடிகர்கள் நேரில் வரவில்லை.

சூர்யா இரங்கல்: அதேசமயம் சூர்யா விஜயகாந்த் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஒரு கண்ணில் துணிச்சலையும் மறு கண்ணில் கருணையையும் கொண்ட அபூர்வ கலைஞர் அவர். அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து புரட்சி கலைஞராக கேப்டனாக நம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர். அண்ணன் விஜயகாந்த்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

விமர்சனம்: சூர்யாவின் இந்த இரங்கலுக்கு சிலர் விமர்சனத்தையும் முன்வைத்தனர். அதாவது போகிறபோக்கில் ஒரு காரில் அமர்ந்துகொண்டு கடமைக்கு இரங்கல் சொன்னது போல் சொல்லியிருக்கிறார். அவருக்காக விஜயகாந்த் பெரியண்ணா படத்தில் நடித்துக்கொடுத்தார். இதுதான் சூர்யா காட்டும் நன்றிக்கடனா என்று கேள்வி எழுப்பினர். இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறனும் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Blue Sattai Maran Slams actor Suriya For Vijayakanth

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய்க்கு செந்தூரபாண்டி போல, உங்களுக்கு பெரியண்ணா படத்தில் நடித்து தந்தவர் கேப்டன்.நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் இங்கே வர இயலவில்லை என்கிறீர்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும் ஆனால்.. மனிதநேயம் மிக்க மகத்தான கலைஞருக்கு... இப்படி காரில் சென்றவாறே அவசர அவசரமாக அஞ்சலி செலுத்துவது ஏன்?

நீங்கள் தங்கும் அறையில் ஓரிரு நிமிடம் பேசி வீடியோவை வெளியிட்டால் என்ன? அல்லது காரில் ஏறும் முன்போ, பின்போ கூட பேசலாமே? Ethics எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதா? Enjoy the new year" என குறிப்பிட்டிருக்கிறார். ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட் இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X