துணிச்சல் இருக்கா? திருப்பூர் சுப்ரமணியம் தனஞ்ஜெயனுக்கு.. ப்ளூ சட்டை மாறன் கிடுக்குப்பிடி கேள்விகள்

சென்னை: கங்குவா படத்தின் பெரும் தோல்வி, தமிழ் திரையுலகையோ ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. காரணம் படத்தின் தோல்விக்கு யூடியூப் சேனல்கள் எடுக்கும் பப்ளிக் ரிவ்யூவ் என படக்குழு மட்டும் இல்லாமல், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சுமத்தினர். ஆனால் படத்தின் விமர்சகர்கள் தரப்பில் இருந்து கங்குவா படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டை இருப்பதாகவும், அதனால்தான் படத்தினை மக்கள் அங்கீரிக்கவில்லை என்றும் கூறிவந்தனர்.

இப்படியான நிலையில், தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து, அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் யூடியூப் சேனல்களுக்கு திரையரங்க வளாகத்தில் பப்ளிக் ரிவ்யூவ் எடுக்க அனுமதி அளிக்ககூடாது என குறிப்பிடப்பட்டது. இதற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமும் தெரிவித்தார். இதுமட்டும் இல்லாமல், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர், தனஞ்ஜெயன் பல யூடியூப் சேனல்களுக்கு கங்குவா படத்தினை திட்டமிட்டு தோல்விப்படமாக மாற்றிவிட்டார்கள், குறிப்பாக சூர்யா வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இரண்டு கட்சியினரும் திட்டமிட்டு வேலை செய்து தோல்விப்படமாக மாற்றிவிட்டார்கள் எனத் தெரிவித்தார்.

blue sattai maran dhananjayan

இதற்கு விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிஸ்மி போன்றவர்கள் தனஞ்ஜெயன் போன்றவர்கள் தமிழ்சினிமாவுக்கே ஆபத்தானவர்கள் எனக் கூறினார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையினால், கடந்த வாரத்தில் பப்ளிக் ரிவ்யூவிற்காக யூடியூப் சேனல்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இந்த வாரம் நடிகர் மற்றும் இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி தனது படமான சொர்க்கவாசல் படத்திற்காக மக்கள் மத்தியில் விமர்சனம் சேகரித்தார். இதற்காக ஒரு யூடியூப் சேனலின் மைக்கினை வாங்கி, அவரே பப்ளிக் ரிவ்யூவ் எடுத்துள்ளார். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தனஞ்ஜெயனுக்கு சில அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுள்ளார்.

blue sattai maran dhananjayan

பப்ளிக் ரிவ்யூவ்: சொர்க்கவாசல் படத்திற்கு தியேட்டரில் பப்ளிக் ரிவியூ எடுத்தார் ஆர்.ஜே.பாலாஜி. இவர்களே தடை விதித்து இவர்களே மீறுவார்களாம். சென்ற வாரமும் இதேபோல அனுமதி தந்திருந்தால்.. ஜாலியோ ஜிம்கானா, எமக்கு தொழில் ரொமான்ஸ், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். அனுமதி இல்லாததால் இவை அனைத்தும் வந்ததும் தெரியவில்ல. போனதும் தெரியவில்லை.

தடை: இதற்கு திருப்பூர் சுப்ரமணியம் என்ன சொல்லப்போகிறார்? இந்தியன் 2, கங்குவா போன்ற படங்களுக்கு பாதிப்பு என்றால் பல யூட்யூப் சேனல்களுக்கு மாங்கு மாங்கென்று பேட்டி தரும் இவர்கள்.. பப்ளிக் ரிவியூ தடையால் சிறுபடங்கள் கடும் பாதிப்பு அடைவது குறித்து ஏன் பேசவில்லை? கங்குவாவை திட்டமிட்டு காலி செய்கிறார்கள் என ஓயாமல் பேட்டி தரும் தனஞ்செயன் அவர்களே... பப்ளிக் ரிவியூவிற்கு சென்ற வாரம் போட்ட தடையை இந்த வாரம் நீக்கியது யார்? ஆர்.ஜே.பாலாஜிக்கு மட்டும் இந்த தடை பொருந்தாதா? நீதி, நேர்மை, தடை உத்தரவு எல்லாம் வாயில் மட்டும்தானா? செயலில் இல்லையா?

blue sattai maran dhananjayan

துணிச்சல்: பப்ளிக் ரிவியூவிற்கு அனுமதி என முன்பே தெரிந்திருந்தால்.. நேற்று வெளியான சாதுவன்,மாயன், சைலன்ட், திரும்பிப்பார், பரமன் போன்ற சிறுபடங்களுக்கு உதவியாக இருந்திருக்குமே.இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு இந்த தடையால் சிறுபடங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி இருந்தனர். அதுதான் தற்போது நடந்துள்ளது. இந்த இரு வாரங்களில் பத்திற்கும் மேற்பட்ட சிறு படங்கள் சந்தித்த இருட்டடிப்பை இன்னும் எத்தனை வாரம் நீட்டிக்க உத்தேசம்? அடுத்து வரும் புஷ்பா 2, விடுதலை 2, கேம் சேஞ்சர், விடாமுயற்சி போன்ற பெரிய படங்களின் பப்ளிக் ரிவியூவிற்கு தடை போட உங்களுக்கு துணிச்சல் உண்டா?. நிச்சயம் இருக்காது" என கேள்வி எழுப்பியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue sattai maran dhananjayan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X