கேம் சேஞ்சரும் ஊத்திக்கிச்சு.. 1300 கோடிக்கு ஷங்கரை நம்பி யார் ரிஸ்க் எடுப்பாங்க? ப்ளூ சட்டை கேள்வி!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர், ஷங்கர். இவரது சினிமாக்களைப் பார்த்து, குறிப்பாக இவரது படங்களில் சில காட்சிகளும் பாடல்களும் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்தைப் பார்த்து வியப்படைந்த தமிழ் சினிமா இவரைக் இன்றும் கொண்டாடி வருகின்றது. ஆனால் இவரது கடைசி இரண்டு படங்களும் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்விப்படமாக மாறியது. இப்படியான நிலையில், இவர், தனது அடுத்த படமாக, இந்தியன் 3 படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் சந்தேகங்கள் உள்ளது.

இப்படியான நிலையில், இந்தியன் 3 படத்திற்குப் பின்னர், இவரது, இயக்கத்தில் உருவாகவுள்ள படம், எழுத்தாளர் மற்றும் மதுரை எம்.பி, சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை மைய்யப்படுத்திய கதைதான். மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படத்தினை எடுக்க இவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் இவரது கடைசி இரண்டு படங்களான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் ஏறகனவே தோல்வியைத் தழுவிய நிலையில், வேள்பாரி படத்திற்கு யார் தயாரிக்க முன் வரப்போகின்றார்கள் என்ற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்துள்ளார். மேலும் பிரமாண்டம் என இந்தக் காலத்திலும் ரசிகர்களை திருப்தி படுத்த முடியாது, படத்தின் கதையில் பிரமாண்டம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

blue sattai maran game changer shankar

பிரமாண்டம்: உலகின பல அழகிய லொக்கேஷன்களை 4K வில் துல்லியமான டிவி மூலம் பார்க்கும் காலமிது. Mr.Beast எனும் உலகின் நம்பர் 1 யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்.. திரைப்படங்களை விட பிரம்மாணட செலவில்வீடியோககளை போடுகிறார். நம்மூர் வில்லேஜ் குக்கிங் சேனல்.. சமையலை பிரம்மாண்டமாய் செய்து அசத்துகிறது. இப்படியான காலத்தில்.. இன்னும் இந்த பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து ஹிட் அடிக்க சங்கர் நினைப்பது ஆச்சர்யம். கதைக்குதான் பிரம்மாண்டம் தேவை. பிரம்மாண்டத்திற்காக கதை தேவையில்லை என்பதை பாகுபலி, RRR போன்ற படங்கள் உணர்த்தி விட்டன.

தயாரிப்பாளர்: இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களின் இமாலய தோல்விகளால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். ஆகவே இந்தியன் 3 படத்திற்கு எந்தளவு வரவேற்பிருக்கும் என்பது பெருங்கேள்வி. இந்நிலையில் வேள்பாரி எனும் மெகா பட்ஜெட் படத்துக்கு தயார் என்கிறார். அதுவும் மூன்று பாகங்கள். ஒரு பாகத்திற்கே இமாலய பட்ஜெட்டை போடும் சங்கர்.. இந்த மூன்றுக்கும் சேர்த்து குறைந்தது 1,300 கோடியாவது பட்ஜெட் வைக்கலாம். இவரது தற்போதைய மார்க்கெட்டை நம்பி இந்த வரலாறு காணாத ரிஸ்க் எடுக்க போகும் தயாரிப்பாளர் யார்? தனது ஒருபடத்தில் நடிக்க வைக்கவே. ஹீரோ உள்ளிட்ட முக்கியநடிகர்களிடம் பல்க் கால்ஷீட் கேட்பார். அதற்கே பலர் யோசிப்பார்கள். மூன்று பாகங்களுக்கும் சேர்த்து பல ஆண்டுகள் பயணிக்க எத்தனை பேர் தயாராக உள்ளனர்?

சரி: ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவினைப் பார்த்த ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் கூறுவது சரிதான். இன்னும் சொல்லப்போனால், ஒரு பாடலுக்காக பல கோடிகளை செலவு செய்து எடுத்துவிட்டால், ரசிகர்களை திருப்தி படுத்த முடியாது. அண்மையில் ரிலீஸ் ஆன கங்குவா படமும் கதையில் பல ஓட்டைகள் இருந்ததால், பெரும் தோல்விப்படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X