Suriya: ஓடாத ரெட்ரோ யாருக்குமே நஷ்டம் தராது என்பது என்ன வகையான உருட்டு? தனஞ்செயனை விளாசிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜுமே இணைந்து தயாரித்தார்கள். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். கடந்த மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், சூர்யாவின் 44வது படம். படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், படம் வணிக ரீதியாக தோல்விப் படம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம், படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளில் இருந்தே தியேட்டரில் கூட்டம் இல்லை என்று, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ரெட்ரோ வெற்றிப் படம் என்றும், சூர்யாவே ரெட்ரோ படத்தை தோல்விப் படம் என்று கூறினால், நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இவரது இந்த பேட்டி தொடர்பாக, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Blue Sattai Maran Slams Dhananjayan For Suriya Retro Movie Box Office Collection

அவரது பதிவில், " ரெட்ரோ தோல்வியை சூர்யாவே ஒத்துக்கொண்டாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் - முரட்டு முட்டு கொடுக்கும் தனஞ்செயன்.

* தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர்கள் என யாருக்குமே ரெட்ரோவால் நஷ்டம் இல்லை என பட்டப்பகலில் பச்சைப் பொய் சொல்கிறார் தனஞ்செயன்.

* ஓடாத படம் யாருக்குமே நஷ்டம் தராது என்பது என்ன வகையான உருட்டு?

* ரெட்ரோ படத்திற்கு 2 வாரங்களாக ஆள் வராவிட்டால் டிக்கட், கேண்டீன், பார்க்கிங் வசூல் பெரிய பாதிப்பை சந்திக்காதா? அது தியேட்டர் ஓனருக்கு நஷ்டம் தானே?

* சூர்யா சொந்த படங்களை தயாரிப்பதால்.‌ விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை என்கிறார் இவர்.

* கங்குவா, ரெட்ரோ ஆகியவை ஃப்ளாப் ஆனதால்.. அடுத்து வரும் சூர்யா படத்தின் வியாபாரம் குறையத்தானே செய்யும்? அது சூர்யா எனும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானே?

* இதே நிலை நீடித்தால் வாடிவாசல் படத்தின் வியாபாரமும் பாதிக்குமே? அதன் தயாரிப்பாளர் தாணுதானே? அதை விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்களா?

* ரெட்ரோவிற்கு OTT, Satellite மூலம் வரவேற்பு இல்லாவிட்டால்.. அடுத்து வரும் சூர்யாவின் படத்தை சில பல கோடிகள் குறைவாகத்தானே வாங்குவார்கள்? இது சூர்யா எனும் தயாரிப்பாளரை பாதிக்காதா?

* ரெட்ரோவை வணிக ரீதியாக வெற்றி என தற்போது யூட்யூப் பேட்டிகளில் உருட்டி வருகிறீர்களே...

Blue Sattai Maran Slams Dhananjayan For Suriya Retro Movie Box Office Collection

* தைரியம் இருந்தால் படத்தின் பட்ஜெட் , தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளின் வசூலை ப்ரேக் டவுன் போட்டு சொல்ல முடியுமா?

* ஆந்திராவில் சூர்யாவுக்கு பெரிய மார்ககெட் உள்ளதென கூறுவீர்களே..‌ அங்கே எவ்வளவு வசூல்?

* திரையுலகை சேர்ந்த நேர்மையான விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் யாரும் இப்படத்தை வெற்றி என சொல்லவில்லை.

* நீங்கள் மட்டும்தான் முரட்டு முட்டு தருகிறீர்கள்.

* மற்றவர்கள் உண்மையை சொல்வது வன்மம் என்றால்.. பாசிடிவிட்டி எனும் பெயரில் நீங்கள் இப்படி பச்சைப் பொய் சொல்வதற்கு பெயர்தான் சொம்படிப்பது" என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X