மேடையில் திடீரென கெட்ட வார்த்தையில் பேசிய இயக்குநர் ஹரி.. வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: அருண் விஜய்யின் யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையில் இயக்குநர் ஹரி பேசும் போது திடீரென சில கெட்ட வார்த்தைகளை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Recommended Video

Director Hari-மேடையில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர் ஹரி | Yaanai Trailer Launch #Kollywood

சமீப காலமாக சினிமா பட வசனங்களில், சினிமா பட விழாக்களில் பிரபலங்களே இப்படி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் கலாச்சாரம் தலைதூக்கி இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் ஹரி மேடையில் கெட்ட வார்த்தை பேசியதை ப்ளூ சட்டை மாறன் கண்டித்து ட்வீட் போட்டுள்ளார்.

கெட்ட வார்த்தை பேசினால் தான் கெத்து

கெட்ட வார்த்தை பேசினால் தான் கெத்து

கெட்ட வார்த்தை பேசினால் தான் கெத்து என இளம் இயக்குநர்கள் பலரும் தங்கள் படங்களில் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் கெட்ட வார்த்தைகளை தங்கள் படங்களில் பேச வைத்து வருகின்றனர். இயக்குநர் அட்லி, லோகேஷ் கனகராஜ் என பல இளம் இயக்குநர்களும் இதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபாச பேச்சுகள்

ஆபாச பேச்சுகள்

அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசுவது மட்டுமின்றி அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களின் புகைப்படங்களை படு மோசமாக மார்பிங் செய்து ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளில் சண்டை போட்டு வருகின்றனர். ஒரு நடிகரை இழிவுப் படுத்தினால் அடுத்த நடிகரின் ரசிகர்கள் என்ன புளியங்காய் பறித்துக் கொண்டிருப்பார்களா? அவர்களும் போட்டா போட்டிக்கு ஆபாசமான சண்டையை போட்டு அனைத்து முன்னணி ஹீரோக்களையும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

கெட்டவார்த்தையில் பேசிய ஹரி

கெட்டவார்த்தையில் பேசிய ஹரி

இளைஞர்கள் தான் இப்படி சபை நாகரீகம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று பார்த்தால், பிரபல இயக்குநரான ஹரி சமீபத்தில் நடந்த தனது யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே இப்படி கெட்ட வார்த்தையில் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் பேசியதற்கு அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் சிரித்தார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் விளாசல்

ப்ளூ சட்டை மாறன் விளாசல்

"யானை ப்ரெஸ் மீட்டில் அசிங்கமாக பேசிய இயக்குனர் ஹரி. குதூகலித்து மகிழ்ந்த அருண் விஜய், பிரியா பவானி, தலைவாசல் விஜய். சில வாரங்களுக்கு முன்பு 'எருமை மாடுகளை பலாத்காரம் செய்யும் கேரக்டர் தருகிறேன்' என ப்ரெஸ் மீட்டில் மிஷ்கின் பேசி இருந்தார்." என்று ட்வீட் போட்டு விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ராஜமெளலிக்கே தலைக்கனம் இல்லை

ராஜமெளலிக்கே தலைக்கனம் இல்லை

மேலும், "1,000 கோடி வசூல் தரும் பான் இந்தியா படங்களை எடுத்திருந்தாலும் பிரெஸ் மீட்டில் தலைக்கனம் இன்றி நாகரீகமாக பேசுகிறார்கள் ராஜமௌலி, பிரசாந்த் நீல், நடிகர் யஷ் போன்றவர்கள். ஆனால் மிஷ்கின், ஹரி போன்றோர் மீடியா முன்பு அருவருப்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என ஊடகத்துறையினர் கருத்து." என இயக்குநர் ஹரி மற்றும் மிஷ்கின் போன்ற பிரபலங்கள் பொதுவெளியில் பேசும் போது நாகரிகத்துடன் பேச வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X