Seenu Ramasamy - வெளில யோக்கியன் வேஷம்.. பண்றது கில்மாத்தனம்.. சீனு ராமசாமியை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Seenu Ramasamy (சீனு ராமசாமி) பத்திரிகையாளர் வைத்த குற்றச்சாட்டில் இயக்குநர் சீனு ராமசாமியை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதை அடுத்து நடிகைகளுக்கு என்னென்ன பாலியல் தொல்லைகள் நடந்தன என்பது குறித்து தொடர்ந்து சிலர் பேசிவருகின்றனர். பிக்பாஸில் விசித்திராவும் ஒரு விஷயத்தை சொல்ல அதுவும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் பத்திரிகையாளர் பிஸ்மி இயக்குநர் சீனு ராமசாமி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Blue Sattai Maran Slams Director Seenu Ramasamy Due Manisha Yadav Issue

பிஸ்மி பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தில் மனிஷா யாதவ் நடித்தார். ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்தது. அப்போது மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி என்னவெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதனை மனிஷாவே எனக்கு ஃபோன் செய்து சொன்னார். அந்த வாக்குமூலமும் என்னிடம் இருக்கிறது. நல்ல இயக்குநர் என்று பெயர் எடுத்தவரின் இன்னொரு முகம் இதுதான்" என தெரிவித்திருந்தார்.

பரபரப்பு: சீனு ராமசாமி மீது திரையுலகில் பெரும்பாலானோருக்கு மதிப்பு இருக்கிறது. சூழல் இப்படி உள்ள நிலையில் பிஸ்மி சுமத்திய குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் சீனு ராமசாமிக்கு எதிராக கருத்துக்கள் எழ மறுபக்கம் இதனை அந்த நடிகையே சொல்லியிருக்கலாமே எனவும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

சீனுவின் விளக்கம்: இந்நிலையில் சீனு ராமசாமி இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வணக்கம், இவங்க தான் என்னால சினிமாவ விட்டே போயிட்டாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுகிறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்" என குறிப்பிட்டு மனிஷா யாதவ் சீனு ராமசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை இணைத்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இயக்குனர் 'சக்கரை' ராமசாமி பற்றி பிஸ்மி அளித்த பேட்டியை தனது யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கியுள்ளதாம் சேனல். தவறு செய்தவர்கள்தான் தடயத்தை அழிக்க துடிப்பார்கள். உங்கள் வலியுறுத்தலால்தான் அந்த வீடியோ நீக்கப்பட்டதாம். உண்மையா 'சக்கரை' ராமசாமி? அப்ப உங்க மேல தப்பு இருக்குன்னுதான அர்த்தம்?

கில்மாத்தனம்: வெளில பரம யோக்யன் வேசம். ஆனா பண்றது எல்லாம் கில்மாத்தனம். எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டாங்களோ? வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்ணை Molestation பண்ணி... அவங்க அழுதுட்டே வெளிய போனாங்களாமே? ஏன்யா இப்படி இருக்கீங்க? பெண்கள் எல்லாம் இனி பயப்படாம தைரியமா புகார் அளிக்கவும். மீடியாவுலயும் பேசுங்க‌. சாயம் வெளுக்கட்டும்" என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக பிஸ்மி பேசியிருந்த பகுதியை சம்பந்தப்பட்ட சேனல் தனது யூட்யூப் தளத்திலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X