தோல்வி உறுதி.. GENZ DMKக்கு இவங்களா பிராண்ட் அம்பாசிடர்?.. அடுத்து யாரு தர்பூசணி திவாகரா? விளாசிய பிரபலம்
சென்னை: இணையத்துக்குள் சென்றாலே நேற்றில் இருந்து அதாவது மே 30 மாலையில் இருந்து மிகவும் அதிகம் பகிரப்பட்ட வீடியோக்களாக இருந்தது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திமுகவின் இன்ஃபுளியன்சர்களாக செயல்பட்டு வந்த, சமூக வலைதள வாசிகள் தாங்களாகவே அறிவித்து, ஏற்பாடு செய்த, GENZ DMK மீண்டு வருவோம், மீண்டும் வருவோம் என்ற நிகழ்ச்சி குறித்ததுதான்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான பாதி, பாதி வீடியோ துணுக்களைப் பகிர்ந்து, விஜய் ரசிகர்களும் தவெகவைச் சேர்ந்தவர்களும் திமுகவைவும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களையும் கிண்டலடித்து வருகிறார்கள். அதற்கு திமுக ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனோ, இந்த நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதாவது, அவரது எக்ஸ் பக்கத்தில், " அறிவார்ந்த இளம் சமூகத்தை கட்டமைப்பதே திமுகவின் Gen Z எனும் புதிய அரசியல் களம் வெல்ல உதவும். இதுபோன்றோரை முன்னிறுத்தினால் தோல்வி தொடரும். நிச்சயம் தொடரும். அடுத்து யார் உங்கள் Gen Z brand Ambassador? வாட்டர் மெலன் திவாகரா?" என்று காட்டமான விமர்சனப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ப்ளூ சட்டை மாறனைப் பொறுத்தவரையில் சினிமா விமர்சனங்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாடு அரசியல் களத்தில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கும் அதிரடி மாற்றங்களுக்கும் தனது ஸ்டைலில் கருத்து சொல்பவர். பல நேரங்களில் தவெக மற்றும் முதலமைச்சர் விஜய்யை எதிர்த்து விமர்சித்துள்ளார். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில தருணங்களில் ஆதரவாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இப்படி இருக்கையில் திமுகவின் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளியன்சர்கள் நடத்திய GENZ DMK மீண்டு வருவோம், மீண்டும் வருவோம் என்ற நிகழ்ச்சி குறித்து அவர் தெரிவித்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்ததுடன் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications