விளங்கும்டா தமிழ் சினிமா.. ப்ளூ சட்டை மாறனையே கடுப்பேற்றிய ஜீவா.. அப்படி என்ன நடந்துச்சு?

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற வசனமான, "கன்டிஷன்ஸை ஃபாலோ பண்ணுங்கடா .. கன்டிஷன்ஸை ஃபாலோ பண்ணுங்கடானு சொன்னேனே கேட்டீங்களா?" என்ற வசனம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஜீவா அளித்த பதில் பலருக்கும் அதிருப்தியாகத்தான் இருந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஜீவாவின் பதிலுக்கு, விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படம் கடந்த 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை மலையாள இயக்குநரான நிதீஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். படம் ஜனரஞ்சகமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், " கண்டிஷன்ஸை ஃபாலோ பண்ணுங்கடா .. கண்டிஷன்ஸை ஃபாலோ பண்ணுங்கடானு சொன்னேனே கேட்டீங்களா?" என்பதுதான்.

Blue Sattai Maran Slams Jiiva Recent Press Meet About Minister Anbil Mahesh Troll Dialogue

இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்களின் போது, மீட்பு பணியில் ஈடுபட்ட திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் அழுது கொண்டே பேசிய வார்த்தைகள். அமைச்சரின் இவ்வாறு பேசியதை விஜய் ரசிகர்களும் சில அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் நடிப்பு என்று விமர்சித்தார்கள். இப்படி இருக்கையில் திரைப்படத்தில் அமைச்சர் பேசியதை வசனமாக வைத்து, கிண்டல் அடித்துள்ளது என்பது சர்ச்சையை கிளப்பியது.

ஜீவா பதில்: இப்படி இருக்கையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த வசனம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் ஜீவா, " இயக்குநர் பேசச் சொன்னார் அதனால் நான் பேசினேன். டிரெண்டிங்கில் இருப்பதை படத்தில் இடம் பெறச் செய்யலாம் என்பதுதான் நோக்கம் மற்றபடி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு, உடனே இயக்குநரைப் பார்த்து அப்படிதானே" என்று கூறுகிறார். அதற்கு இயக்குநரும் ஆமாம் என்பது போல தலை அசைக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன்: ஜீவா இவ்வாறு பதில் அளித்ததற்கு, " அன்பில் மகேஷை கிண்டல் செய்து பேசியது குறித்த கேள்விக்கு.. பழியை தூக்கி இயக்குனர் மீது போட்டு விட்டார் ஜீவா. படம் வென்றால் ஹீரோ காரணம். சம்பளம் பல கோடி உயரும். தோற்றால் அல்லது சர்ச்சை வந்தால் இயக்குனர் காரணமாம். விளங்கும்டா கோடம்பாக்கம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X