அதிமுக ஆட்சியில அப்படி.. திமுக ஆட்சியில இப்படி பேசுறீங்க கமல்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!
சென்னை: கமல்ஹாசன் சமீப காலமாக என்ன பேசினாலும் எங்கே பேசினாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டு அவர் பட்டபாடு இருக்கே அதற்கு முட்டுக் கொடுக்க அடுத்தடுத்த வார எபிசோடுகளையும் அவர் பயன்படுத்திய விதம் ரசிகர்களை கிண்டல் செய்ய வைத்தது.
பரிதாபங்கள் கோபி எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பாவங்கள் வீடியோவாக வெளியிட்டு பங்கம் பண்ணி விட்டார்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பை ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கி உள்ளார்.
சிற்றிடர்.. பேரிடர்: 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் செயற்கை வெள்ளம், 2023ல் வந்திருப்பது தான் இயற்கை வெள்ளம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய நிலையில், அவரை விட ஒருபடி மேலே சென்று அப்போ வந்தது சிற்றிடர், ஆனால் இப்போ வந்திருப்பது பேரிடர் என கமல்ஹாசன் பேசியிருப்பதும் இது குறை சொல்லும் நேரம் இல்லை, உதவி செய்ய வேண்டிய நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி: அப்போ அதிமுக ஆட்சியில் இருந்த போது, "ஒரு மணி நேர மழை தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை என ஆரம்பித்து, கருணை மழையை சேகரிக்க நிலைகள் தயாராக இல்லை, கரையோர மக்கள் மீது கடைக்கண்ணாவது காட்டுங்கள்" என பொங்கி இருந்தார். ஆனால், தற்போது அந்த பொங்கலை எங்கே காணோம் என கேட்டு விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
திமுக அரசுடன் கூட்டணி வைத்த நிலையில், தான் கமல்ஹாசன் தனது மய்யத்தில் இருந்து விலகி தற்போது இப்படியெல்லாம் ஜால்ரா அடிக்கிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
பிக் பாஸிலும் பிரச்சனை: கமல்ஹாசன் சினிமாவில் விக்ரம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, எச். வினோத், மணிரத்னத்தின் தக் லைஃப் என மாஸ் காட்டி வருகிறார். ஆனால், பிக் பாஸ் மற்றும் அரசியலில் தொடர்ந்து அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











