வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலும் திங்க தெரியாத அப்பாவிகளா ஹீரோக்கள்? பிரபலம் பொளேர்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படம் நேற்று ரிலீஸ் ஆனதும்தான் ஆனது, படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி, விமர்சகர்கள் வரை என பலரும் புமபி வருகின்றார்கள் என்பதை விடவும், கதறி வருகின்றார்கள். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹைப் கொடுக்கப்பட்டு வெளியான படங்கள் எல்லாம் மோசமான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது. ஏற்கனவே ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம் வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் அடி வாங்கியது.

blue sattai maran kanguva suriya

இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கங்குவா படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக படத்தினை அமைதியாக ரிலீஸ் செய்திருந்தால் கூட ரசிகர்கள் அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால் படக்குழு கொடுத்த ஓவர் பில்டப்களால் படத்தினை பெரும் நம்பிக்கையோடு பார்க்கச் சென்ற, ரசிகர்கள் இணையத்தில் ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றார்கள். பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படங்கள் குறித்தும் அவற்றின் ரிசல்ட் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue sattai maran kanguva suriya

ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "பெரிய ஸ்டாரகளின் உழைப்பு: கமல், விக்ரம், சூர்யாவை ஷங்கர், ரஞ்சித், சிறுத்தை சிவா வச்சி செஞ்சிட்டாங்க. பலமணி நேர மேக்கப், சிக்ஸ் பேக் உழைப்பு எல்லாம் வீணா போச்சி என உருகுவோரின் கவனத்திற்கு.. பெரிய ஸ்டார்களின் படங்கள் ஜெயித்தால் அதற்கு முக்கிய அல்லது முழு காரணமும் அவர்தான் என ஓவர் பில்டப் செய்வது. படம் ஊத்திக்கொண்டால் பழியை தூக்கி இயக்குனர் மேல் போடுவது. என்னடா இது பித்தலாட்டம்? தன் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், முக்கிய டெக்னீசியன்கள், உடன் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் என அனைத்தையும் ஓகே செய்வது இந்த ஸ்டார்கள்தான்.

blue sattai maran kanguva suriya

ஹீரோ புராணம்: அதுபோக.. இயக்குனரின் கதையில் தலையிட்டு அதை குழப்பி வேறு டிசைனில் மாற்றுவது, எடிட்டிங் போன்ற போஸ்ட் புரடக்சன்,பட ப்ரமோசன் என இவர்கள் தலையிடாத ஏரியாவே இல்லை. ப்ரமோஷனில் கூட படத்தை பற்றி பேசுவதை விட ஹீரோ புராணம்தான் அதிகம் பேசுவார்கள். நீண்ட நேரம் மேக்கப், சிக்ஸ் பேக் வைக்கத்தான் பலகோடி சம்பளம். கேரவன், ஸ்டார் ஹோட்டல் உணவு என பல வசதிகள். சிக்ஸ் பேக் வைத்த எந்த ஹீரோவும் ஷூட்டிங்கில் பசியால் வாடி மயங்கியதில்லை.தேவையான எல்லா டயட் உணவும் தயாரிப்பாளர் செலவில் தரப்படுகிறது. ஆகவே ஓவராக புல்லரிக்க வேண்டாம்.

blue sattai maran kanguva suriya

கேவலமான காட்சிகள்: உண்மையாகவே மிக பிரம்மாண்ட, நேர்த்தியான படமெடுத்த ஹாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் கூட மேடைக்கு மேடை.‌ நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம், சாப்பிடாமல் களைத்தோம் என மூக்கு சிந்தியதில்லை. இங்கு மட்டும்தான் இதெல்லாம். படத்தில் பல கேவலமான காட்சிகளை முன்பே பார்த்துவிட்டு...தேவையில்லா சீன்கள் மற்றும் காது கிழியும் இசையை குறைக்கவோ,நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் இந்த பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?

blue sattai maran kanguva suriya

வாழைப்பழம்: ஒவ்வொரு மனிதனும்.. தான் உழைத்த பணத்தில்தான் டிக்கட், தின்பண்டம், பார்க்கிங் என 300 முதல் சில ஆயிரம் வரை செலவு செய்து.‌ மொக்கை படத்தை பார்த்து கோவத்தில் வெளியே வருகிறான். பணம் மட்டுமல்ல. பாதி நாளும் வீணாய் போகிறது. ஹீரோக்கள் எல்லாம் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலும் திங்க தெரியாத அப்பாவிகள் அல்ல. படத்தின் தோல்விக்கு முக்கால்வாசி பொறுப்பு அவர்களையே சாரும். ஆகவே இவர்களுக்கு எல்லை மீறி முதுகு சொறியும் சொம்பு தூக்கிகள் அடக்கி வாசிப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் பொதுமக்கள் உங்களை இப்படித்தான் சட்டியில் போட்டு வறுப்பார்கள். பொய் மூட்டைகள் எதுவும் எடுபடாது‌. உழைச்சிருக்காரு, குலைச்சிருக்காருன்னா.. அது நல்ல படமா இருக்கனும்‌. இல்லன்னா தர்ம அடிதான்‌" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue sattai maran kanguva suriya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X