விஜயகாந்த் இருந்திருந்தா மன்னிப்பு கேட்டிருக்கவே மாட்டார்.. கார்த்தியை வெச்சு விளாசும் ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர் கார்த்தி, திருப்பதி லட்டு குறித்து பேசியது குறித்து நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதன் பின்னர், நடிகர் கார்த்தி நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், இதுவே விஜய்காந்த் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார், என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, நடிகர் கார்த்தியை தொடர்ந்து கலாய்த்து வருகின்றார். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் கார்த்தியின் 27வது படமாக உருவான மெய்யழகன் படத்தை, 96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.

blue sattai maran karthi tripati laddu

இந்நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நாலாபுறமும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. மெய்யழகன் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படம் 'சத்யம் சுந்தரம்' என பெயரில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து,ஹைதராபாத்தில் நேற்று அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில்,தொகுப்பாளினி கார்த்தியிடம்'உங்களுக்கு லட்டு வேணுமா?' என்று கேட்க, அதற்கு கார்த்தி இப்போது லட்டு குறித்து பேச வேண்டாம், அது சென்சிட்டிவான விஷயம். எனவே லட்டு தொடர்பாக இப்போது பேச வேண்டாம் எனக் கூறினார்.

blue sattai maran karthi tripati laddu

கார்த்தியின் பதிலைக் கேட்டு அரங்கில் இருந்த பலர்,கைத்தட்டி சிரித்தனர். நடிகர் கார்த்தியின் பேச்சை கண்டித்த ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், "சினிமா நிகழ்வில் லட்டு வைத்து கிண்டலடித்து பேசுகிறார்கள். மேலும் லட்டு சென்சிடிவ்வான விஷயம் எனவும் சொல்லுகின்றார்கள். எங்கள் நம்பிக்கையை ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள், நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். அதேநேரத்தில் , சனாதான தர்மம் என வரும் போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்துத் பேச வேண்டும் என மிகவும் காட்டமாக கண்டித்திருந்தார்.

blue sattai maran karthi tripati laddu

பவன் கல்யாணின் ரியாக்‌ஷன் மிகவும் காட்டமாக இருந்ததால், நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார். அதாவது, "பவன்கல்யாண் சார், உங்கள் மீது எனக்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் பேசியது எதிர்பாராதவிதமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை எப்போதும் பின்பற்றுகிறேன்" என்று பதிவிட்டு, தனது மன்னிப்பினைத் தெரிவித்தார்.

blue sattai maran karthi tripati laddu

விளாசப்படும் கார்த்தி: இப்படியான நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், நடிகர் கார்த்தியை வெச்சு விளாசி வருகின்றார். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், ஒருபோதும் மன்னிப்பு கேட்டிருக்கமாட்டார் எனவும் நடிகர் சத்யராஜைப் போல் நீங்களும் மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது,அந்தப் பதிவில், " 'டேய் தம்பி.. நம் மக்கள் எப்படி போனா நமக்கென்ன? பக்கத்து ஸ்டேட்ல நம்ம படம் ரிலீஸ் ஆகனும். அதனால மன்னிப்பு கேட்ரு. இல்லன்னா பான் இண்டியா ஸ்டார் ஆக முடியாது'. சரிண்ணே. ஐயா. மன்னிச்சிக்கங்க. தெரியாம பேசிட்டேன்" என ஒரு பதிவில்லும், " இதுவே தன்மானத்தமிழன் விஜயகாந்தாக இருந்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். பாகுபலி ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இப்போது ஆந்திர நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்கிறார் கார்த்தி" என மற்றொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.

blue sattai maran karthi tripati laddu

சூப்பர் ஸ்டார்: மற்றொரு பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். அதில், " சகுனித்தனமாக எந்த கேள்வி கேட்டாலும் தலீவர் மாதிரி சாணக்யத்தனமாக பதில் சொல்ல வேண்டும்" எனவும், மற்றொரு பதிவில் தொகுப்பாளர் ரக்‌ஷன் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், " 'தம்பி‌‌... கார்த்தியை கோத்துவிட்ட ஆங்கர் நீதான்னு பேசிக்கறாங்களே.‌..நெசமா?'

ரக்சன்: ஐயய்யோ. அது நான் இல்லீங்கோ. நான் ஹோஸ்ட் பண்ணது கோவை ட்ரைலர் ல லாஞ்ச். சம்பவம் நடந்தது ஆந்திரா ப்ரெஸ் மீட்ல" என பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X