Nayanthara: குரங்குடன் ஒப்பிட்டு பேசியிருந்தால் நயன்தாரா சும்மா இருப்பாரா? ப்ளூ சட்டை மாறன் கேள்வி
சென்னை: நயன்தாராவைச் சுற்றி சர்ச்சை வளையம் இருக்கின்றதா? சர்ச்சை வளையத்தைச் சுற்றி நயன்தாரா இருக்கின்றாரா எனும் அளவுக்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடிக்கொண்டு உள்ளது. நயன்தாரா சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், வலைபேச்சு யூடியூப் சேனலைச் சேர்ந்த பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி ஆகியோரை குரங்கு எனக் குறிப்பிட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வலைபேச்சு யூடியூப் தளத்தில் 50 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டால் அதில், 45 வீடியோக்கள் நயன்தாரா குறித்துதான் இருக்கும் எனவும் விமர்சித்தார். இதற்கு வலைபேச்சு தரப்பில் மறுப்பும் பதிலடியும் கொடுக்கப்பட்ட நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நயன்தாரா அளித்த பேட்டியில், வலைபேச்சு யூடியூப் சேனலை நடத்துபவர்கள் என்னைப் பற்றிப் பேசி, அதன் மூலம் வருமானம் ஈட்டி, அதனால் அவர்கள் சாப்பிடுகின்றார்கள் என பேசியிருந்தார். மேலும் பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி ஆகியோரை, மூன்று குரங்குகள், அதாவது, கண்களை மூடிக்கொண்டும், வாயை மூடிக்கொண்டும், காதுகளை மூடிக்கொண்டும் இருக்கும் குரங்கு பொம்மைகளைப் பார்த்திருப்போம் அல்லவா, அதுபோலத்தான் இவர்கள் மூவரும் என குறிப்பிட்டுப் பேசினார்.

இது தொடர்பாக வலைபேச்சு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில், நயன்தாராவை கடுமையாக சாடியிருந்தனர். மேலும் ஒரு மாதத்திற்கு தாங்கள் 30 வீடியோக்கள் ரிலீஸ் செய்வதாகவும், ஒரு மாதத்திற்கே நயன்தாரா குறித்து ஒன்றோ, இரண்டோ செய்தி குறித்துதான் பேசுகின்றோம் எனவும், அதுவும் சினிமா தொடர்பான செய்திகள்தான் எனவும் கூறி காட்டமான பதிலடி கொடுத்தனர்.
ப்ளூ சட்டை மாறன்: இப்படியான நிலையில், வலைபேச்சு யூடியூப் சேனலுக்கு ஆதரவாக சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ 3 நொடி வீடியோ காப்பிரைட் விவகாரததில் தனுஷை சாடி பலபக்க கட்டுரை எழுதினார் நயன் மேடம். அதன் ஆரம்பத்தில் B/o Selvaraghavan, S/o Kasthuriraja என குறிப்பிட்டிருந்தார். தனிப்பட்ட விவகாரத்தில் குடும்பத்தினரை இழுப்பது என்ன வகையான நாகரீகம்? இதற்கு பார்வதி உள்ளிட்ட மலையாள நடிகைகள் லைக் வேறு செய்திருந்தனர். ஒருவேளை.. இப்படி ஒரு கடிதத்தை தனுஷ் எழுதி.. அதில் W/o Vignesh Shivan என்றும், Daughter of என இவரது பெற்றோர் பெயர்களை குறிப்பிட்டிருந்தால்...
குரங்கு: முற்போக்குவாதிகளும், பார்வதி உள்ளிட்ட புரட்சி நடிகைகளும் எப்படி சலங்கை கட்டி ஆடியிருப்பார்கள்? தற்போது.. Hollywood Reporter India எனும் ஆங்கில யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என மறைமுகமாக நையாண்டி செய்துள்ளார் மேடம். ஆங்கிலத்தில் மங்கி எனவும், ஹிந்தியில் பந்தர் எனவும் விளக்கம் வேறு. ஒருவேளை வலைப்பேச்சில் இவரை.. இதேபோன்று குரங்குடன் ஒப்பிட்டு பேசி இருந்தால்.. இந்நேரம் எப்படி கொந்தளித்து இருப்பார்?
ஏன்?: படத்தை விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் தரம் தாழக்கூடாது, தனிநபர் தாக்குதல், வன்மம் கூடாது என நீதிபேசும் தனஞ்செயன் போன்ற திரைத்துறை நீதிபோதகர்கள்... தற்போது எங்கே போனார்கள்?பெண்களை இழிவாக பேசும்போது... ரவுண்டு கட்டி ஆடும் உங்கள் புரட்சி சலங்கைகள்... ஆண்களை பற்றி கீழ்த்தரமாக பேசும்போது மட்டும் ட்ரங்க் பெட்டியில் சுருண்டு கிடப்பது ஏன்?” என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











