நயன் மேடம்.. 3 குரங்குனு சொல்லலாமா? சலங்கை கட்டி ஆடும் புரட்சியாளர்கள் எங்கே? ப்ளூசட்டை மாறன் நச்!
சென்னை: நடிகை நயன்தாரா அண்மையில் அளித்த பேட்டியில், தன்னை தொடர்ந்து விமர்சித்து வரும் மூன்று யூடியூபர்கள் மூன்று வகை குரங்கு, அவர்கள் என்னைப் பற்றி பேசி தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் 3 குரங்கு என்று சொல்லலாமா, தரம் தாழ்ந்த விமர்சனம் எதற்கு என்று பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா அளித்த பேட்டியில், கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என சொல்லும் 3 மோசமான குரங்குகள் என்னை பற்றியே பேசி வருகிறார்கள். அவர்கள் போட்ட 50 வீடியோவில், 45 வீடியோவில் என்ன பற்றித்தான் பேசி இருப்பார்கள். இப்படி பேசுவதால் அவர்களுக்கு வியூஸ் வருகிறது. அதற்காக என்னைப்பற்றியே பேசி வருகிறார்கள் என்று பேசி இருந்தார். நயன்தாரா இப்படி தரம் தாழ்ந்து பேசியது, வலைபேச்சு யூடியூப் சேனலைச் சேர்ந்த பிஸ்மி, அந்தணன், சக்தியைத் தான். இதற்கு அவர்களும் கடுமையான கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், 3 நொடி வீடியோ காப்பிரைட் விவகாரததில் தனுஷை சாடி பலபக்க கட்டுரை எழுதினார் நயன் மேடம். அதன் ஆரம்பத்தில் B/o Selvaraghavan, S/o Kasthuriraja என குறிப்பிட்டிருந்தார். தனிப்பட்ட விவகாரத்தில் குடும்பத்தினரை இழுப்பது என்ன வகையான நாகரீகம்? இதற்கு பார்வதி உள்ளிட்ட மலையாள நடிகைகள் லைக் வேறு செய்திருந்தனர். ஒருவேளை, இப்படி ஒரு கடிதத்தை தனுஷ் எழுதி.. அதில் W/o Vignesh Shivan என்றும், Daughter of என இவரது பெற்றோர் பெயர்களை குறிப்பிட்டிருந்தால்,, முற்போக்குவாதிகளும், பார்வதி உள்ளிட்ட புரட்சி நடிகைகளும் எப்படி சலங்கை கட்டி ஆடியிருப்பார்கள்?
3 குரங்குகளா: தற்போது, நயன்தாரா Hollywood Reporter India எனும் ஆங்கில யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என மறைமுகமாக நையாண்டி செய்துள்ளார். ஆங்கிலத்தில் மங்கி எனவும், ஹிந்தியில் பந்தர் எனவும் விளக்கம் வேறு. ஒருவேளை வலைப்பேச்சில் இவரை, இதேபோன்று குரங்குடன் ஒப்பிட்டு பேசி இருந்தால்.. இந்நேரம் எப்படி கொந்தளித்து இருப்பார்?
சலங்கை கட்டி ஆடும் புரட்சியாளர்கள்: படத்தை விமர்சனம் செய்வது தவறில்லை, ஆனால் தரம் தாழக்கூடாது, தனிநபர் தாக்குதல், வன்மம் கூடாது என நீதிபேசும் தனஞ்செயன் போன்ற திரைத்துறை நீதிபோதகர்கள்... தற்போது எங்கே போனார்கள்? பெண்களை இழிவாக பேசும்போது... ரவுண்டு கட்டி ஆடும் உங்கள் புரட்சி சலங்கைகள், ஆண்களை பற்றி கீழ்த்தரமாக பேசும்போது மட்டும் ட்ரங்க் பெட்டியில் சுருண்டு கிடப்பது ஏன்? நயன்தாராவை கடுமையாக சாடி ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











