Rajinikanth: ரஜினிகாந்த்தை விஜய் நிம்மதியாக தூங்க விடமாட்டார்.. கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில், மூன்றாம் இடத்தினை வென்றது. இப்படியான நிலையில் அவருக்கு திரைத்துறையினர், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன் பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து எதாவது பதிவிடும்போது, அவரிடம் வம்புக்கு நிற்பதைப்போலத்தான் பதிவிடுவார். இது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் சினிமா, திரையுலக வாழ்க்கை கடந்து சூப்பர் ஸ்டார் குறித்து, ப்ளூ சட்டை மாறன் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவை பலரது கவனத்தினை ஈர்த்திருந்தாலும் சினிமாவைக் கடந்தும் அவரை விமர்சிப்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் நீண்ட நெடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

blue sattai maran rajinikanth ajithkumar racing

ரஜினிகாந்த்: அதில், " கார் ரேசில் தல வென்றதற்கு தலீவர் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார். அரசியலுக்கு வர பயந்து புறமுதுகிட்டு ஓடியவர்.. தான் உண்டு. தன் ஷூட்டிங், டப்பிங் உண்டு என இருக்க மனமில்லை. நான் முன்பு சொன்னதுபோல.. தமிழக அரசியலை தீர்மானிக்கும் கிங் மேக்கராக.. அதாவது தனது குருநாதர் சோ அவர்களைப்போல ஆகவேண்டுமென முயல்கிறார். ஆனால் சோவிற்கு உள்ள அரசியல் அறிவில் 1% கூட இவருகில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அது இவருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமே இல்லை. தலீவருக்கு இரண்டே ஆசைகள்தான். 1.தனது எஜமானர்களின் நீண்டகால எதிரியான திமுக தோற்க வேணடும், 2. திரைப்பட வியாபாரம் மற்றும் வசூலில் தன்னை தோற்கடித்த விஜய் மீதான காண்டு.

blue sattai maran rajinikanth ajithkumar racing

விஜய்: விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்றதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டார். ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து ஜெயித்து விடுவாரோ எனும் பதட்டம் தொற்றிக்கொண்டது. விஜய் முதலர்வராக உள்ள மாநிலத்தில் வாழ்வதை தலீவரால் ஜீரணிக்கவே இயலாது. இந்த புத்தாண்டில் நல்லவனை ஆண்டவன் கை விட மாட்டான். கெட்டவங்களை கை விட்ருவான் என குறிப்பிட்டார். எப்போதுமே வெறும் வாழ்த்து செய்தி மட்டும் போடுபவர்.. இம்முறை இப்படி ஒரு உள்குத்தை சொருகியுள்ளார்.

blue sattai maran rajinikanth ajithkumar racing

நிம்மதியான தூக்கம்: அதாவது விஜய் கெட்டவராம். அஜித் நல்லவராம். தற்போது அஜித் ரேசில் வென்றதற்கு.. திடீர் அதிசயமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மறைமுகமாக சீண்டுகிறாராம். தலீவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று 2026 தேர்தல் முடிந்த பிறகு வர வாய்ப்புணடு. ஒருவேளை தேர்தலில் தவெக தோற்றால் விஜய் அரசியலை விட்டு விலகலாம் அல்லது கமலை போல சினிமாவில் நடித்தபடியே பார்ட் டைம் அரசியல் செய்யலாம்.

blue sattai maran rajinikanth ajithkumar racing

அப்படி ஒரு நிலைமை வந்தால்... மீண்டும் அவர்தான் வியாபாரம் மற்றும் வசூலில் நம்பர் ஒண்ணாக இருப்பார். தலீவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் வசூல்.. GOAT வசூலில் 30% கூட இல்லை. ஆகவே... மின்சார கண்ணாவால்.. தலீவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி. அவர் உங்களை நிம்மதியாக தூங்கவே விடமாட்டார்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue sattai maran rajinikanth ajithkumar racing

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X