ரஜினியின் சாணக்ய தந்திரம் இதுவா.. இளம் இயக்குநர்களை அலைக்கழிக்கிறாரா? ப்ளூ சட்டை மாறன் குற்றச்சாட்டு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அட்டாக் செய்ய வேண்டும் என்றால் ப்ளூ சட்டை மாறனுக்கு திருவிழா கொண்டாடுவது போல் இருக்குமோ என பலரையும் யோசிக்க வைக்கிறார். பேட்டியில் ஏதாவது பேசினால், இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது பேசினால், தனது நண்பர்களை சந்தித்தால், தனக்கு பிடித்த படங்களை பாராட்டினால் என, ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அட்டாக் மோடில் வந்து அட்டன்டன்ஸ் போட்டுவிடுகிறார் ப்ளூ சட்டை மாறன். அப்படி இப்போது ஒரு அட்டாக் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் தெலுங்கு ஸ்டார்கள், மலையாள ஸ்டார்கள், பாலிவுட் ஸ்டார்கள் என பலரும் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. கூலி படத்திற்கு பின்னர் இவரது நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படம், ஜெயிலர் 2. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Blue Sattai Maran Rajinikanth

அதேபோல் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு அடைவதால், அவருக்கான பொன்விழா நடத்த சினிமா துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், ரஜினிகாந்த், எதுவும் வேண்டாம், என மறுத்து வருவதாக தகவல்கள் வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் படங்களைப் பார்க்கிறார். அப்படி படம் பார்க்கும்போது, அவருக்கு மனதிற்கு பிடித்த படங்கள் குறித்து பாராட்டி வாழ்த்து தெரிவிப்பார். இவர் இந்த ஆண்டு வாழ்த்திய படம் என்றால் அது சமுத்திரக்கனி நடித்த திரு.மாணிக்கம் படம் தான். இப்படியான நிலையில், ரஜினி, இப்படி பாராட்டுவதில் கூட சில சாணக்ய தந்திரம் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

Blue Sattai Maran Rajinikanth

சாணக்ய தந்திரம்: இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், "தலீவரின் சாணக்ய தந்திரம்: குதிரையை ஜெயிக்க வைப்பதை விட.. ஜெயித்த இளம் குதிரை மீது சவாரி செய்து ஜெயிப்பது தான் தலீவரின் புது பாலிசி. அதனால்.. அறிமுக இயக்குனர்களை கண்டு கொள்ளவே மாட்டார். லேட்டஸ்டாக வெளியாகும் ஹிட் படங்களை பார்த்துவிட்டு.‌ அந்த இளம் இயக்குனர்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டுவார். அப்படத்தில் மக்கள் ரசித்த வில்லன் அல்லது கேரக்டர் ரோலை எனக்கு தந்திருந்தால் நான் நடித்திருப்பேனே என்பார். உதாரணம்: ஜூகர்தண்டா பாபி சிம்மா கேரக்டர். ஆனால் ஹீரோவாக மட்டுமே நடிப்பார்.

Blue Sattai Maran Rajinikanth

பட்டியல்: பிறகு‌‌.. எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க எனக் கூறுவார். இதை நம்பி பல இளம் இயக்குனர்கள் வேலை செய்வார்கள். பிறகு அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு வாங்க என அனுப்பி வைப்பார். சில பல மாதங்கள் கழித்து அவர்கள் மீண்டும் வருவார்கள். அதற்குள் வேறு சில படங்கள் ஹிட்டாகி.‌ ட்ரெண்ட் மாறியிருக்கும். இவர்களை எல்லாம் கழற்றி விட்டு.. அவர்களை அழைத்து பாராட்டி.. கதை பண்ண சொல்வார். டான் இயக்குனர் சிபி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தேசிங்கு பெரியசாமி, மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் என பட்டியல் நீளும்.

Blue Sattai Maran Rajinikanth

ரசிகர்கள்: இப்போது டிராகன் நன்றாக ஓடுவதால்.. அந்த இயக்குனரை அழைத்து பாராட்டுவார். மிஷ்கின் நடிச்ச கேரக்டரை எங்கிட்ட‌ சொல்லி இருந்தா .‌நான் நடிச்சு இருப்பனே என சொல்வார். எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என்பார். ரிப்பீட்டு!!" என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு பலரும், கடுமையாக விமர்சித்து வந்தாலும் அவர்களுக்கும் தனது பாணியில் பதிலடி கொடுத்து வருகிறார்.

Blue Sattai Maran Rajinikanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X