மணிப்பூர் பத்தி பேசல.. காவ்யா மாறனுக்காக கவலைப்படும் முரட்டுக்காளை.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!
சென்னை: மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு வார்த்தைக் கூட குரல் கொடுக்காத முரட்டுக்காளை காவ்யா மாறனுக்காக இப்படி கவலைப்படுறாரே என ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சை ட்ரோல் செய்து விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ஹுகும், ஜுஜுபி பாடல்கள் மூலமே ரஜினிகாந்த் தனக்கு ஏற்பட்டுள்ள இன்செக்யூரிட்டியை காண்பித்து விட்டார் என கலாய்த்து இருந்த ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில், அதனை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் ட்வீட்களை பதிவிட்டு ரஜினி ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகிறார்.

ப்ளூ சட்டை மாறனை அசிங்கமாக திட்டி ரஜினி ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வரும் நிலையில், அதற்கும் பதில் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார் ஆன்டி இண்டியன் இயக்குநர்.
காவ்யா மாறனுக்காக கவலைப்பட ரஜினி: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று பேசியது ஒட்டுமொத்த ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
இயக்குநர் நெல்சன், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள், குட்டி கதை என ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி வந்த ரஜினிகாந்த் கடைசியாக காவ்யா மாறனுக்காகவும் கவலைப்பட்டு பேசியிருந்தார்.

சன்ரைசர்ஸில் நல்ல வீரர்களை எடுங்க: நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக கலாநிதி மாறன் பற்றி பேசும் போது.. கலாநிதி மாறன் சன் ரைசர்ஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும். காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது என பேசியிருந்தார்.
அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

மணிப்பூர் பெண்களுக்காக குரல் கொடுக்கல: "மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் பலர் வருத்தம், கண்டனம் தெரிவிச்சிட்டாங்க. பட்.. முரட்டுக்காளை இதுவரை அதுபத்தி பேசல.
ஆனா.. எந்த விஷயத்துக்கு வருத்தப்பட்டு இருக்காரு பாருங்க. இதுதான் தவைரின் தனித்தன்மை. ஹாட்ஸ் ஆஃப் ஜி. இது மாதிரி பல அரிய கருத்துகளை சொல்லிட்டே இருங்க. மக்களுக்கு மிகுந்த பயனைத்தரும்." என பதிவிட்டு ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதை ட்ரோல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











