Santhanam - வடக்குப்பட்டி ராமசாமி.. மூன்று பக்கம் சொம்பு தூக்கும் சந்தானம்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்

சென்னை: நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் படத்திலிருந்து ஒரு காட்சி வெளியானது. அந்தக் காட்சி தந்தை பெரியாரை கிண்டல் செய்வது போல் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. அதனையடுத்து சந்தானம் அதற்கு விளக்கமளித்தார். இந்த சூழலில் அதனை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

Blue Sattai Maran Slams Santhanam in Vadakkuppatti Ramasamy Issue

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.

வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். படம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி படத்திலிருந்து சில நொடிகள் ஓடக்கூடிய க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் சந்தானத்தை பார்த்து ஒருவர், கடவுள் இல்லைனு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்துனாரே அந்த ராமசாமியா நீ என்று கேட்கும்படி இருந்தது.

சந்தானம் விளக்கம்: அதனை பார்த்த பலரும் தந்தை பெரியாரை கிண்டல் அடித்திருக்கிறார்கள் என்று விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் படத்தை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கியது. இதனையடுத்து நடிகர் சந்தானம் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், "படத்தின் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியது. எதற்கும் பயப்பட வேண்டாம். இதெல்லாம் படத்துக்கான ப்ரோமோஷன் என நினைத்துக்கொள்வோம் என்று தயாரிப்பாளரிடம் நான் சொன்னேன். நானும் இயக்குநர் கார்த்திக்கும் கவுண்டமணியின் ரசிகர்கள். அதனால்தான் அவரது முதல் பட தலைப்பு டிக்கிலோனா. இப்போது வடக்குப்பட்டி ராமசாமி.

அடுத்ததாக நானும், ஆர்யாவும் இணைந்து நடிக்கும் படத்துக்கும் கவுண்டமணி பேசிய வசனத்தைத்தான் பதிவு செய்திருக்கிறார் கார்த்திக் யோகி. எனவே வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது. ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம். யார் மனதையும் புண்படுத்துவது அல்ல" என்று தெரிவித்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: பெரியாரை இழிவுப்படுத்தியதாக எழுந்த கண்டனத்தை ப்ரோமோஷன் என சந்தானம் பேசியதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ப்ரமோஷனுக்காக எதையும் செய்வது ப்ரமோஷன் ஆகாது. ரெட் ஜெயண்ட் உங்கள் படத்தில் இருந்து பின் வாங்கியதே அந்த ப்ரமோஷனால்தான்.

எல்லாரும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஆனால் உதயநிதியின் நண்பன், பாமக ஆதரவாளன், சங்கி என மூன்று பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் கோடம்பாக்கத்தில் நீங்கள் ஒருவர்தான். அனைவருக்குமான காமடியான இருக்கும் வரைதான் இங்கே மதிப்பு. சாதி, மதம், ஆளுங்கட்சி என கலர் கலராக பச்சோந்தி வேடம் போட்டால்.. மக்கள் ஒதுக்கி விடுவார்கள். அது சூப்புற ஸ்டாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X