விஜய் - திரிஷாவை இணைத்து பேசிய சத்யராஜ் மகள்.. விட்டு விளாசிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்யை திமுகவினர் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துவருகிறார்கள். அதற்கு தவெகவினரும் தகுந்த பதிலடியை கொடுத்துவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஆகிய இரண்டு பேரையும் இணைத்து வைத்து பேசினார். அவரது இந்தப் பேச்சு தவெகவினரிடம் கொதிப்பை ஏற்படுத்திய நிலையில் ப்ளூ சட்டை மாறன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று கடந்த சில வருடங்களாகவே கூறப்பட்டுவந்தது. ஆனால் அவரோ அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தார். திடீரென எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தான், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். அது அவரது ரசிகர்களிடையே பெரிய மகிழ்ச்சியை உண்டு செய்தது. அதேசமயம் அரசியலில் இறங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் அறிவித்தது மறுபக்கம் சோகத்தை ஏற்படுத்தியது.

திமுகவை விமர்சனம் செய்யும் விஜய்: தவெக கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டிலிருந்து கடைசியாக நடந்த அக்கட்சியின் பொதுக்குழுவரை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்கிறார் விஜய். முக்கியமாக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயரை சொல்லியே அட்டாக் செய்தார். அது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும்; இப்படி தொடர்ந்து விமர்சனம் செய்வதால் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் ரிலீஸில் சிக்கல் வருமோ என்ற எண்ணமும் அவர்களிடத்தில் உருவாகியிருக்கிறது.

Blue Sattai Maran Slams Sathyaraj Daughter For Vijay And Trisha

திமுகவினரின் பதிலடி: திமுகவை கண்டபடி விமர்சித்துவரும் விஜய்க்கு திமுகவினரும் கடுமையான பதிலடியை கொடுத்துவருகிறார்கள். அதிலும் விஜய்யின் பெர்சனல் விஷயங்களை கையில் எடுக்கும் அவர்கள்; திரிஷாவுடன் அவரை இணைத்து வைத்து பேசுகிறார்கள். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை; வேறு வழியே இல்லாமல் விஜய்க்கு பதிலடி கொடுக்கிறேன் என்கிற பெயரில் இவ்வளவு கீழ்த்தரமாக திமுகவினர் இறங்கியிருக்கிறார்கள் விஜய்யின் தொண்டர்கள் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சத்யராஜின் மகளான திவ்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

விஜய் - திரிஷாவை இணைத்து பேசிய திவ்யா: அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஏசி கேரவனில் அமர்ந்துகொண்டு சொகுசு விமானத்தில் ஃப்ரெண்டுடன் அமர்ந்து ஃப்ரெண்ட் திருமணத்துக்கு செல்லும் போலி அரசியல்வாதி உதயநிதி கிடையாது. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். மழை, வெள்ளம் என எது வந்தாலும் நமக்காக களத்தில் இறங்கி வேலை செய்வார். பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் உதயநிதி. அவரை எதிர்த்து யார் நின்றாலும் டெபாசிட் வாங்கமாட்டார்கள். அவர் வீழ்த்த முடியாத ஹீரோ" என்று கூறியிருந்தார்.

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்: அவரது அந்தப் பேச்சில் திரிஷாவையும், விஜய்யையும் திவ்யா இணைத்து பேசியதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். அந்தவகையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள். விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு"என பதிவிட்டு கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X