மாமனிதனா.. நீ மாமா மனிதன்.. மனிஷா யாதவ் மேட்டர்.. சீனு ராமசாமியை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவ் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் படுமோசமாக விமர்சித்து போட்ட ட்வீட் தீயாக பரவி வருகிறது.
சீனு ராமசாமி தனக்கும் மனிஷா யாதவுக்கும் எந்தவொரு பிரச்சனையுமில்லை என்பது போல பதிவு போட்ட நிலையில், சீனு ராமசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் என்றும் அவர் மீது குற்றம் இருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவும் சீனு ராமசாமி மீது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
சிக்கிய சீனுராமசாமி: மன்சூர் அலி கான் - திரிஷா விவகாரம் பற்றி பேசும் போது வலைப்பேச்சு பிஸ்மி போகிற போக்கில் சீனு ராமசாமி பல வருடங்களுக்கு முன்னதாக நடிகை மனிஷா யாதவுக்கு கொடுத்த பாலியல் டார்ச்சர் குறித்து வெளிப்படையாக பேசியது அடுத்த பஞ்சாயத்தை கிளப்பியது. மனிஷா யாதவ் வாய் திறக்க மாட்டார் என நினைத்து சீனு ராமசாமி விளக்கம் அளித்த நிலையில், தற்போது மனிஷா யாதவ் போட்ட போஸ்ட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாமா மனிதன்: ”நீ மாமனிதன் இல்லை. இன்றுமுதல் மாமாமனிதன்.” என்றும் 'சக்கரை' ராமசாமி.. திரையுலக நித்யானந்தாவாம். தோலை உரிச்சிட வேண்டியதுதான்.” என்றும் ப்ளூ சட்டை மாறன் பொங்கி உள்ளார்.
திரிஷாவுக்கு கிடைத்தது போல: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலி கான் அவதூறு பேச்சு பேசியதற்கு எதிராக ஒன்று திரண்ட திரையுலகம் நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியால் நேர்ந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பார்களா? என்கிற கேள்வியையும் ப்ளூ சட்டை மாறன் எழுப்பி உள்ளார்.
சீனு ராமசாமி பதில் சொல்வாரா?: அடுத்த படத்தை ஆரம்பித்துள்ள சீனு ராமசாமி தற்போது நடிகை மனிஷா யாதவ் பதிவிட்டுள்ள போஸ்ட்டுக்கு சரியான பதில் தருவாரா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











