பெண்களை கேவலமாக சித்தரித்து பீப் சாங் போட்டவர் தானே.. சிம்புவை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: பாடி ஷேமிங் பண்ணாதீங்க என சிம்பு பேசியது மற்றும் இறங்கி செய்யலாம்னு தோணுது என கெளதம் மேனன் பேசிய இரண்டும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை வெகுவாக பாதித்துள்ளது.

இறங்கி செய்யப் போறதுன்னா என்ன அடியாட்களை வைத்து அடிக்கப் போகிறாரா? கொலை மிரட்டல் விடுக்கிறாரா கெளதம் மேனன் என கேள்வி எழுப்பி வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது சிம்புவையும் விடவில்லை.

பெண்களை கேவலமாக சித்தரித்து பீப் சாங் போட்டவர் தானே உங்க AAA பட ஹீரோ என விளாசி உள்ளார்.

இப்பத்தான் எரிய ஆரம்பிச்சிருக்கு

இப்பத்தான் எரிய ஆரம்பிச்சிருக்கு

வெந்து தணிந்தது காடு என சிம்புவை வைத்து இயக்குநர் கெளதம் மேனன் படம் எடுத்துள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் இப்பத்தான் எரிய ஆரம்பிச்சிருக்கு என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் சிம்பு சமீபத்தில் ப்ளூ சட்டை மாறனை ட்ரிக்கர் செய்வது போல பேசியதால், தொடர்ந்து அவர்களை வம்பிழுத்து ட்வீட் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

இறங்கி செய்யப் போறியாமே

இறங்கி செய்யப் போறியாமே

"எலே வீரபாகு.. ஏதோ எறங்கி செய்ய போறியாமே. ஏன் லேட்டாகுது? சீக்கிரம் வா. ஏகப்பட்ட ஜோலி கெடக்கு." என இயக்குநர் கெளதம் மேனன் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து மீம்களால் பதிலடி கொடுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

பீப் சாங் போட்ட சிம்பு

பீப் சாங் போட்ட சிம்பு

ஏ கிரேடு பீப் சாங் போட்ட AAA ஹீரோ அந்த பாட்டுல பீப் போடப்பட்ட வரிகளை வெளிப்படையாக சொல்ல தைரியம் இருக்கா என ட்வீட் போட்டு விளாசி உள்ளார். பெண்களை படு ஆபாசமாக சித்தரித்து பாடல் பாடிவிட்டு இப்போ உருவ கேலி பண்ணாதீங்கன்னு சொல்றாரா என சிம்புவுக்கு எதிராக பீப் பாடல் சர்ச்சையை மீண்டும் தூசு தட்டி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

பிராடு சேனல்

பிராடு சேனல்

ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் சிம்புவுக்கு எதிராக ட்வீட்களை போட்டு வரும் நிலையில், கடுப்பான ரசிகர்கள் பிராடு சேனல் என சொல்லி ப்ளூ சட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ் சேனலை அன்சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர் சினிமா பிரபலங்களுடன் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் சண்டை போட்டு வருவதால், அவருக்கு எதிராக ஏகப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

இந்த வருட மீரா மிதுன்

இந்த வருட மீரா மிதுன்

நடிகர்கள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் போல ப்ளூ சட்டை மாறன் மாறி விட்டார் என்றும் இந்த வருட மீரா மிதுன் இவரு தான் என்றும் சிம்பு ரசிகர்கல் ட்ரோல் வீடியோ மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X