Leo Ticket Rate: பிரபுவுக்கு ரொம்ப தான் பேராசை.. லியோ டிக்கெட் விலையை ஏத்தணுமா? ப்ளூ சட்டை கேள்வி!
சென்னை: விஜய், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் போது தியேட்டரில் டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வழக்கம் போல வைத்துள்ளார். அவரது ட்வீட்டை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அதனை ட்ரோல் செய்துள்ளார்.

லியோ படத்துக்கு 5 காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை சிறப்பு காட்சி ஒதுக்கப்பட முடியாது என லியோ படக்குழு சட்டப் போராட்டம் நடத்தியும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தும் கடைசி வரை முடியவே முடியாது என மறுத்து விட்டனர்.
ஜெயிலர் படம் 9 மணிக்கு வெளியாகி 525 கோடி வசூலை ஈட்டிய நிலையில், லியோவுக்கு என்ன பிரச்சனை என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

எஸ்.ஆர். பிரபு கோரிக்கை: அதிகாலை காட்சிகளை விட டிக்கெட் விலையில் flexibility இருந்தால் நல்லா இருக்கும் என நினைக்கிறேன். 1 கோடி பட்ஜெட் படத்துக்கும் ஒரே டிக்கெட் விலை 500 கோடி பட்ஜெட் படத்துக்கும் ஒரே டிக்கெட் விலை என்பது சரியான அணுகுமுறை அல்ல என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு டிக்கெட் விலையை படத்திற்கும் பெரிய நடிகர்களுக்கும் ஏற்றவாறு ஏற்றி இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

சின்ன படங்களுக்கு குறைப்பீங்களா: லோ பட்ஜெட் படங்களுக்கு இப்போது இருக்கும் டிக்கெட் விலையை விட கம்மியாக குறைப்பீங்களா என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் டிக்கெட் விலை குறைவாக உள்ளது என்றும் அதனை குறைத்தால் தியேட்டர்கள் பாவம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே 100 ரூபாய்க்கு டிக்கெட்டே இல்லாத நிலை உருவாகி 240 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை சென்றுள்ள நிலையில், ரசிகர்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் டிக்கெட் விலையை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு உயர்த்த கேட்டுள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் விளாசி உள்ளார்.

1000 ரூபாய் ஏத்துனா போதுமா?: அதென்னப்பா ஃபிளெக்ஸி ரேட் என எடுத்த எடுப்பிலேயே எஸ்.ஆர். பிரபுவை விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதாவது இப்போது இருக்கும் 240 ரூபாய் டிக்கெட் விலையை 500 ரூபாயாகவும் அல்லது 1000 ரூபாயாகவும் மாற்ற வேண்டும் என பேராசை படுறீங்களா என வெளுத்து வாங்கி உள்ளார்.
ஏற்கனவே தியேட்டரில் பாப்கார்ன் 500 ரூபாய்க்கும், பெப்ஸி 200 ரூபாய்க்கும், பார்க்கிங் கட்டணம் 100 ரூபாய்க்கும் என ஒருத்தர் படம் பார்க்கவே 1000 ரூபாயை பிடுங்கி வரும் நிலையில், டிக்கெட் விலையை ஏற்றினால் சாமானிய மக்கள் ஓடிடி பக்கம் தான் டோட்டலாக ஒதுங்கி விடுவார்கள் என்று ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











