Rajini: வசூலில் தலைவரை காலி செய்து விடாதீர்கள்.. ரஜினிகாந்த் மீது திடீரென அக்கறை செலுத்தும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சூர்யாவின் ரெட்ரோ படம் வெற்றி என படக்குழு சொல்லி வருகிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்களோ படம் மிகப்பெரிய தோல்விப் படம் என்று கூறி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறும்போது, ரெட்ரோ படம் முதல் நாளில் மட்டும்தான் வசூல் குவித்தது. அதன் பின்னர் படம் வசூலில் சொதப்பிவிட்டது என்றார். இந்நிலையில், திரையரங்க உரிமையாள ஸ்ரீதர் ரெட்ரோ படத்தால் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " தியேட்டர்களில் ரெட்ரோ வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி தாண்டிவிட்டது - படைத்தலைவன் இசை வெளியீட்டில் தியேட்டர் ஓனர் ஶ்ரீதர் கருத்து. OTT, Satellite, Hindi Dubbing rights மூலம் வணிக ரீதியில் லாபம் பெற்றது ரெட்ரோ என யூட்யூப் பேட்டிகளில் உருட்டி வருகிறார் தனஞ்செயன் இருக்கட்டும். அதனால் என்ன? தியேட்டரில் இப்படம் ஊத்திக்கொண்டது எனும் ஊரறிந்த உண்மையை இவர் ஒப்புக்கொள்ள மறுப்பது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?
ஒரு தரமற்ற பொருளை இன்னொருவரிடம் லாபத்திற்கு விற்றுவிட்டு.. தயாரிப்பாளர் safe ஆகிவிட்டார் என பெருமைப்படுவது ஏமாற்று வேலைதானே.. பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை புட்டு புட்டு வைப்பதில் நீங்கள்தானே கோலிவுட்டின் கோமகன்? ரெட்ரோ படம் தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் வசூலித்தது எவ்வளவு? வெளிநாட்டு வசூல் என்ன? இதை வெளியிடாமல் வெற்றி வெற்றி என தினமும் துள்ளி குதிப்பது ஏன்?
முன்னணி நடிகர்களின் ஆஸ்தான அரசவை புலவராக இருந்துவிட்டு போங்கள். அது உங்கள் இஷ்டம். ஆனால் போலியான வெற்றிக்கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். அதை நம்ப யாரும் இங்கே தயாரில்லை. போதாக்குறைக்கு.. கடந்த பல மாதங்களாக கூலி படம் 1,000 கோடி அடிக்குமா? எனும் தலைப்பில் தொடர்ந்து பேசுகிறீர்கள். இப்படி பேசித்தான் கங்குவாவை காலி செய்தீர்கள். தலீவரையும் ( ரஜினிகாந்த்) காலி செய்து விடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், ரெட்ரோ வெற்றிப் படம் என தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் தனஞ்செயன் குறித்து கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், " ரெட்ரோ தோல்வியை சூர்யாவே ஒத்துக் கொண்டாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் - முரட்டு முட்டு குடுக்கும் தனஞ்செயன்.
* தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர்கள் என யாருக்குமே ரெட்ரோவால் நஷ்டம் இல்லை என பட்டப்பகலில் பச்சைப்பொய் சொல்கிறார் தனஞ்செயன்.
* ஓடாத படம் யாருக்குமே நஷ்டம் தராது என்பது என்ன வகையான உருட்டு?
* ரெட்ரோ படத்திற்கு 2 வாரங்களாக ஆள் வராவிட்டால் டிக்கட், கேண்டீன், பார்க்கிங் வசூல் பெரிய பாதிப்பை சந்திக்காதா? அது தியேட்டர் ஓனருக்கு நஷ்டம்தானே?
* சூர்யா சொந்த படங்களை தயாரிப்பதால். விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை என்கிறார் இவர்.
* கங்குவா, ரெட்ரோ ஆகியவை ஃப்ளாப் ஆனதால்.. அடுத்து வரும் சூர்யா படத்தின் வியாபாரம் குறையத்தானே செய்யும்? அது சூர்யா எனும் தயாரிப்பாளருக்கான நஷ்டம்தானே?
* இதே நிலை நீடித்தால் வாடிவாசல் படத்தின் வியாபாரமும் பாதிக்குமே? அதன் தயாரிப்பாளர் தாணுதானே? அதை விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்களா?
* ரெட்ரோவிற்கு OTT, Satellite மூலம் வரவேற்பு இல்லாவிட்டால்.. அடுத்து வரும் சூர்யாவின் படத்தை சிலபல கோடிகள் குறைவாகத்தானே வாங்குவார்கள்? இது சூர்யா எனும் தயாரிப்பாளரை பாதிக்காதா?
* ரெட்ரோவை வணிக ரீதியாக வெற்றி என தற்போது யூட்யூப் பேட்டிகளில் உருட்டி வருகிறீர்களே...

* தைரியம் இருந்தால் படத்தின் பட்ஜெட் , தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளின் வசூலை ப்ரேக் டவுன் போட்டு சொல்ல முடியுமா?
* ஆந்திராவில் சூர்யாவுக்கு பெரிய மார்ககெட் உள்ளதென கூறுவீர்களே.. அங்கே எவ்வளவு வசூல்?
* திரையுலகை சேர்ந்த நேர்மையான விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் யாரும் இப்படத்தை வெற்றி என சொல்லவில்லை.
* நீங்கள் மட்டும்தான் முரட்டு முட்டு தருகிறீர்கள்.
* மற்றவர்கள் உண்மையை சொல்வது வன்மம் என்றால்.. பாஸிடிவிட்டி எனும் பெயரில் நீங்கள் இப்படி பச்சைப்பொய் சொல்வதற்கு பெயர்தான் சொம்படிப்பது" என்று பதிவிட்டுள்ளார். இதுவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் எப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், திடீரென ரஜினிகாந்த் மீது அக்கறை செலுத்தி கருத்து தெரிவித்துள்ளாரே என்று பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
அதேபோல் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். படத்தின் பட்ப்பிடிப்பு தற்போது கேரளாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல், இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கூலி. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அட்டாக்: அதே நேரத்தில் சூர்யாவை அட்டாக் செய்து போஸ்ட் போட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் சில தினங்களுக்கு முன்னர், பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சூர்யாவின் ரியாக்ஷன் என்ன என்று கேட்டு ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் எதற்கும் துணிந்தவன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை இது கற்பனைக்கதை என்றார் இயக்குனர் பாண்டிராஜ். படத்தில் வக்கீல் கேரக்டரில் நடித்தார் சூர்யா. குற்றவாளிகளை எதிர்த்து வாதாடியும் நீதி கிடைக்காது என்பதால் இவரே சட்டத்தை கையில் எடுத்து தண்டிப்பார். அதிமுக ஆண்ட போது நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை நினைவூட்டும் இப்படம் திமுகவின் தற்போதைய ஆட்சியில் 2022 இல் வெளியானது. சூர்யா ஒரு திமுக அனுதாபி என கூறப்படுவதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி. தற்போது உண்மையான நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. படத்தில் பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு எதிராக கோவப்பட்ட சூர்யா.. இந்த தீர்ப்பு வந்தது குறித்து பேசாமல் இருப்பது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது “ என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவும் பலரது கவனத்தை ஈர்த்தது.


Click it and Unblock the Notifications











