திருப்பூர் சுப்பிரமணியத்தை ரவுண்டு கட்டும் ப்ளூ சட்டை மாறன்.. புட்டு புட்டு வைத்து கடும் விமர்சனம்!

சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில், கங்குவா படத்தின் வசூல் சரிவுக்கு மோசமான விமர்சனங்கள் தான் காரணம் என பேசினார். மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பல்வேறு பதில்களை திருப்பூர் சுப்பிரமணியம் அளித்தார். இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றார். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் சுப்பிரமணியம் என்னவெல்லாம் பேசினார், தனது திரையரங்கில் என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்து பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றார். ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் முன் வைத்துள்ள விமர்சனங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

கொரோனா நேரத்தில் மாஸ்டர் படத்திற்கு 50% மக்கள் மட்டுமே அனுமதி என அரசு அறிவித்தது. அதன்படி இவர் தனது sri bakthi cinemas (ஸ்ரீ சக்தி சினிமாஸ் என்பதை ஸ்ரீ பக்தி சினிமாஸ் என குறிப்பிட்டுள்ளார்) தியேட்டரில் 50% பேரை மட்டுமே அனுதித்தார். ஆனால் ஒரு டிக்கட் விலையை இரண்டு மடங்கு விற்றார். இதுகுறித்து செய்தி சேனல்கள் கேட்டதற்கு 'பக்கத்தில் உள்ள காலி இருக்கையில் ஹாண்ட் பேக் உள்ளிட்ட பொருட்களை மக்கள் வைத்து கொள்ளவே இந்த கட்டணம் என்றார். இப்படியொரு பகல் கொள்ளையையும், அதற்கு ஒரு வினோதமான காரணத்தையும் சொல்லி கேட்டதுண்டா? இது தரம் தாழ்ந்த செயல் இல்லையா?

blue sattai maran tirupur subramaniam suriya

விதிமீறல்: சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன்னி தியோல் நடித்த Gadar 2 ஹிந்திப்படம் ரிலீஸ். திருப்பூரில் வடமாநில தொழிலாளிகள் அதிகம் என்பதால் ஹிந்தி படங்களுக்கு மவுசு உண்டு. ஆகவே.. இப்படம் வெளியானபோது நள்ளிரவு 1.35 AM ஷோவிற்கான ஆன்லைன் புக்கிங் இவரது sri bakrhi cinemas தியேட்டரில் ஓப்பன் ஆனது. தமிழக அரசின் அனுமதிப்படி காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ போட வேண்டும். இந்த விதியை இவரது தியேட்டர் மீறியது பற்றி நாம் குறிப்பிட்டபோது.‌ உடனடியாக நள்ளிரவு ஷோ புக்கிங்கை நீக்கிவிட்டார். இதுதான் உங்களின் தரமான செயலா?

blue sattai maran tirupur subramaniam suriya

சூர்யா குடும்பம்: பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, ஜெய்பீம், சூரரை போற்று ஆகிய படங்கள் அனைத்தும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனபோது உச்சக்கட்டமாக கொந்தளித்தவர் நம்ம திருப்பூர் சுப்புதான். இதனால் தியேட்டர் வருமானம் பாதிக்கப்படுகிறது. இனி சூர்யா குடும்பம் நடிக்கும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிடவே மாட்டோம் என சபதம் போட்டார். சில வாரங்களில் அந்த சபதம் காற்றில் கரைந்தது. இன்று அதே நடிகரின் படத்திற்காக சப்போர்ட் செய்து‌‌FDFS பப்ளிக் ரிவியூவை தடை செய்ய குதிக்கிறார்.

blue sattai maran tirupur subramaniam suriya

காஸ்ட்லி கார்: அன்று: விமர்சகர்கள் ஒரு படத்தை பாராட்டுவதால் அந்த படம் ஓடாது. அதேபோல அவர்கள் திட்டுவதால் ஒரு படம் தோற்காது. இன்று: இந்தியன் 2, வேட்டையன், கங்குவா தோல்விக்கு விமர்சகர்தான் காரணம். வாழை படம் வந்தபோது இவர் பேசியது: சிறுவயதில் வாழைத்தார் சுமந்தோம். வலிகளை சுமந்தோம் எனக்கூறும் இந்த இயக்குனர்கள் இப்போது கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள் எனக் கூறினார். பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்கள் வரும்போது அவர்களை விமர்சிப்பதும், சூர்யா படம் வந்தால்.. அதற்கு ஆதரவாக நின்று விமர்சனங்களை எதிர்ப்பதும் எந்த வகையான பாசம்? மற்ற நடிகர்கள், இயக்குனர்கள்.. காஸ்ட்லி காரில் வராமல்.. கட்டை வண்டியிலா வருகிறார்கள்?" என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த விமர்சனங்கள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X