Vijay: விஜய்க்கு எதிராக கருத்து சொன்ன பாஜக மாநில செயலாளர்.. ஆதரவாக புள்ளிகளை அடுக்கிய ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் அடையாளமாக இந்தியாவில் அறியப்படும் உச்சநட்சத்திரம். தமிழ் சினிமா உலகில் ரூபாய் 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் இவர்மட்டும்தான். வணிக ரீதியாக இவ்வளவு உயரத்தில் உள்ள நடிகர் விஜய், சினிமாவில் இருந்து முழுவதுமாக வெளியேறி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், அண்மையில் அதன் கொடியையும் வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் என்பவர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அவரது கருத்துக்கு எதிராகவும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் ப்ளூ சட்டை மாறன் புள்ளிகளை அடுக்கியுள்ளார்.

blue sattai maran vijay bjp

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர் நடிகர் விஜய். சினிமாவில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, அதன் பின்னர் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தைக் கொடுத்துள்ளது. ஆனாலும், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்க்கு அவரது ரசிகர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

blue sattai maran vijay bjp

இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படம் ஆகும். அதாவது இவரது திரை வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படம். படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவரது கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகின்றார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், படம் வசூலில் சாதனை படைக்கும் என கூறப்படுகின்றது.

தவெக: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர். குறிப்பாக படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விலையில்லா உணவகம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு என பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனாலும் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் முழு வீச்சில் அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை.

blue sattai maran vijay bjp

விநாயகர் சதூர்த்தி: இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளரான வினோஜ் செல்வம் என்பவர், நடிகர் விஜய் விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜய்க்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, "புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என இரவு7 மணி வரை காத்திருந்தேன். ஆனால் அவர் சொல்லவில்லை. சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் அதே பழைய தந்திரம். திமுகவை காப்பியடிக்கும் அளவுக்கு தாழ்ந்து போயிருக்கிறார். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே" என குறிப்பிட்டுள்ளார்.

blue sattai maran vijay bjp

ப்ளூ சட்டை மாறன்: வினோஜ் செல்வத்தின் இந்தக் கருத்துக்கு, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளிக்கும் விதமாக கேள்வியை எழுப்பியுள்ளார். அதில், " இதே விஜய்தான சாய்பாபாவுக்கு கோவில் கட்டுனாரு. சமீபத்துல சீரடிக்கும் போயிட்டு வந்தாரு. மாணவர்களுக்கு ஊங்கத்தொகை நிகழ்ச்சில இவருக்கு நெற்றியில் பொட்டு வச்சப்ப.. அதையும் ஏத்துக்கிட்டாரு" என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X