பெரிய சி.ஐ.டி.. இப்ப வாயைத் திறங்க ப்ரோ.. பனையூர் பண்ணையாரே.. விஜய்யை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை

சென்னை: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வருபவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளில் விஜய்யின் பேச்சு குறித்து எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். இதில் விஜய் பேசிய சில கருத்துக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வரும் ப்ளூ சட்டை மாறன், அவ்வபோது விஜய்யை கடுமையாக விமர்சித்து உள்ளார். இந்நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யை காட்டமாக பேசி விமர்சித்துள்ளார்.

Blue Sattai Maran Slams To TVK Vijay Very Angry On Twitter Goes Trending

அதாவது, விஜய் தனது அரசியல் மேடையில் இரண்டு கட்சியினரை தான் கடுமையாக விமர்சித்து பேசுகிறார். ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றொன்று மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி. இந்த இரண்டு கட்சிகளை காட்டமாக விமர்சித்தால் தான் விஜய்யின் அரசியல் செல்லுபடியாகும் என்பது யதார்த்தம், என்றாலும், திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருக்கிறார்கள் என பேசினார். இது பேசு பொருளாகவும் மாறியது.

Blue Sattai Maran Slams To TVK Vijay Very Angry On Twitter Goes Trending

இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு விஜய்யின் முந்தைய அரசியல் மேடைப் பேச்சு மற்றும் தற்போது அரசியல் தளத்தில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் நிகழ்வுகள் குறித்து, பகிர்ந்துள்ளார். இதில் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, பனையூர் பண்ணையார், சி.ஐ.டி. சங்கர், வாயை திறங்க ப்ரோ என காட்டமாக விமர்சித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில்,

" * ரெண்டு பேரும் ரகசிய கூட்டணி வச்சி.. நாடகம் போடறாங்க என திமுக - பாஜக குறித்து கொக்கரித்தார் விஜய். ஆனால்..

* EPS, செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்கள். அமித் ஷாவை சந்திக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறது.

* வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார் 'ஒரே ஒரு குருக்கள் ' ஜி.கே.வாசன்.

* வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆனார் அன்புமணி.

* வாக்கெடுப்பு நடந்த நாளில் டெல்லி சென்ற இளையராஜா.. வாக்களித்தாரா இல்லையா என்பது மர்மமாக உள்ளது.

* இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல்?

* தமிழக மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது. மேலிடத்தையும் பகைத்துக்கொள்ள கூடாது எனும் இரட்டை‌வேடம்தானே இது?

* இன்று சென்னையில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக செய்தி வந்துள்ளது‌.

* இதில் ஒன்றுகூட பனையூர் பண்ணையாரின் கண்களுக்கு தெரியவில்லையா?

* இவர்கள் எல்லாரும் போடும் நாடகத்திற்கு என்ன பெயர்? மைக் முன்பு தொண்டை கிழிய‌ கத்துபவர்.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?

* இவர்கள் எல்லாம் உங்கள் தீம் பார்ட்னர்கள் ‌என்பதால்தானே.

* பெரிய சிஐடி சங்கர். ரகசிய கூட்டணியை கண்டுபிடித்து ஊருக்கு சொல்றாராம்.

* இப்ப வாயை தெறங்க ப்ரோ" என பட்டியலிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இவரது இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X