Vijay: விஜயகாந்த் நினைவு நாளில் மரியாதை செலுத்த வராத விஜய்.. வெச்சு விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகின்றது. இந்நிலையில் காலையில் இருந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும், விஜயகாந்த்தின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் சிலரும் சினிமா பிரபலங்கள் சிலரும் அவரது நினைவு நாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதாக சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டனர். இப்படியான நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எதுவுமே செய்யாமல் இருப்பது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

அதாவது, கேப்டன் நினைவு நாளுக்காக நடத்தப்படும் நிகழ்வில் விஜய் கலந்து கொள்ள வேண்டும் என, விஜயகாந்த்தின் மகனான விஜய் பிரபாகரன், மற்றும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் என இருவரும் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து, அழைப்பிதழை வழங்கினர். அப்போது விஜயகாந்த் உருவ சிலையும் வழங்கினர். இதனால் இன்று, விஜயகாந்த் நினைவிடத்திற்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

blue sattai maran vijayakanth vijay

மேலும், அவரது நினைவு நாள் குறித்து எதாவது பதிவிடுவாரா என பார்த்தால் காலையில் எதுவுமே பதிவிடவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கேப்டன் நினைவு நாள் குறித்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டனர். ஆனால் விஜய் எதுவுமே செய்யாததால். ப்ளூ சட்டை மாறன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.

விஜய்: இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள பதிவில், " தேசத்திற்கு பாடுபட்டவர்கள், கட்சித்தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில்.. அவர்களின் சிலைகள், நினைவிடம் உள்ள இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதுதான் மரியாதை. இதை பல அரசியல் கட்சித்தலைவர்கள் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் நம்மாளு அதை செய்வதில்லை. ஏன்னா... கூட்டம் கூடிரும். பொதுவாழ்க்கைக்கு வந்தா.. வெளிய வந்துதான் ஆகனும். கூட்டம் கூடத்தான் செய்யும். முறைப்படி காவல்துறைகிட்ட அனுமதி வாங்கனும்.

blue sattai maran vijayakanth vijay

வளர்ச்சிக்கு கை கொடுத்தவர்: அதையும் மீறி பிரச்னை வந்தா நீதிமன்றத்தை நாடனும். இதை விட்டுட்டு... கூட்டம் கூடிரும். கூட்டம் கூடிரும்னு சப்பைக்கட்டு கட்டி Work from home பண்ணியே காலத்தை ஓட்டக்கூடாது. இன்னைக்கி விஜயகாந்த் நினைவு நாள். உங்க வளர்ச்சிக்கு கை கொடுத்தவர். நேர்ல போய்தான் அஞ்சலி செலுத்த மாட்டீங்க‌. அட்லீஸ்ட் ஆபீஸ்ல இருந்துட்டே அஞ்சலி செலுத்தற.. அந்த சம்பிரதாய ட்வீட்டையாவது காலைல போட்டா என்ன?

தனி அட்டென்சன்: பெரியார், வேலுநாச்சியாருக்கு போட்ட ட்வீட்கள் 11.30 AM தாண்டிதான் வந்தது. இப்ப விஜயகாந்துக்கும் அதே டைம்தான் போல. தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தற ட்வீட்டை காலைல போட்டா.. கவன ஈர்ப்பு கிடைக்காது. ஏன்னா.‌ காலை 7 மணில இருந்து 11 மணிவரை பல கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தற செய்திகள் வரும். அதுல உங்கள பத்தியும் பத்தோட பதினொன்னா நியூஸ் வரும். அதனால ஆடி அசஞ்சி 11.30 மணிக்கு மேல போட்டா.‌ மீடியா மற்றும் சோஷியல் மீடியால தனி அட்டென்சன் கிடைக்கும். அந்த செய்தி வைரலாகும். அதான? வெளங்கிடும்" என காட்டமாக பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue sattai maran vijayakanth vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X