Vijay: விஜய்க்கு ஜோரா கை தட்டுங்க.. ப்ளூ சட்டை மாறன் என்ன இப்படி இறங்கிட்டாரு? எல்லை மீறுகிறாரே!

சென்னை: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் அவரது நடவடிக்கைகள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதில் மிகவும் முக்கியமான நபர் என்றால் அது ப்ளு சட்டை மாறன். இவர் விஜய் குறித்தும் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், மேடைப் பேச்சுகள் குறித்தும் விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் அவ்வப்போது தனிமனித தாக்குதலை கையில் எடுத்து வருகிறார். அப்படி சமீபகாலமாக விஜய் குறித்தும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குறித்து அவர் பதிவிடும் கருத்துகள் மிகவும் மோசமாக உள்ளது.

அதாவது விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை மிகவும் கேவலமாக இன்னும் சொல்லப்போனால் அநாகரீகமாக புனைப்பெயர்கள் சூட்டி, நாகரிகமற்ற முறையில் விமர்சித்து வருகிறார்கள். ப்ளூ சட்டை மாறன் தான் இப்படி விமர்சிக்கிறார் என்றால், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பொது வெளியிலும், தவெக அரசியல் நிகழ்ச்சிகளிலும் செய்யும் அடிப்படை அறிவற்ற செயல்கள் பொது மக்களுக்கே கோபத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் விஜய் மதுரைக்கு வந்த போது ரோடு ஷோ நடத்தினார். இதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்கள் செய்த சேட்டைகள் சொல்லி மாளாது என்று கூறும் அளவிற்கு இருந்தது. எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என கேட்கும் அளவிற்கு இருந்தது. அதாவது ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடியுள்ள இடத்தில் பால் பாக்கெட்டுடன் வந்து அதை விஜய் மீது பீச்சி அடிக்கிறேன் என பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது பீச்சி அடித்தார்கள். ஆத்திரப்பட்ட காவலர்களோ, அங்கேயே விஜய் ரசிகர்களுக்கு ஊமைக்குத்து குத்திவிட்டார்கள்.

Blue Sattai Maran Slams Vijay Political Activities very Worst Way

அடிப்படை அறிவு: இதெல்லாம் ஒரு புறம் இருக்க வேறு சில ரசிகர்கள் பூசணிக்காயுடன் வந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில், பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை அறிவற்றவர்கள் சிலரால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அவப்பெயர் வருகிறது.

நாகரிகமற்ற: விஜய் ரசிகர்கள் சிலர் செய்யும் இது போன்ற நடவடிக்கைகள் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை வறுத்து எடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் போன்றவர்களுக்கு அல்வாவை கிண்டி கையில் கொடுத்ததைப் போல மாறிவிடுகிறது. அதே நேரத்தில் விமர்சனத்தை முறையாகவும் நாகரீகமாகவும் வைக்காமல் சில நேரங்களில் எல்லை மீறிச் சென்று விடுகிறார் ப்ளூ சட்டை மாறன். அவரது பதிவுகளுக்கு விஜய் ரசிகர்களும் நாகரிமற்ற முறையில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இது ஒரு வாடிக்கையாக மாறிப்போனது.

Blue Sattai Maran Slams Vijay Political Activities very Worst Way

ஜோரா கை தட்டுங்க: இந்நிலையில், விஜய் விமானத்தில் இருந்து இறங்கும் போது, துள்ளிக் குதித்து இறங்குகிறார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், " வண்டியில் இருந்து நேக்காக அணில் போல தாவுவது எப்படி? பயிற்சி அளித்த தவெக தலைவர்" என மோசமாக கேப்ஷன் இட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்களும் இணையவாசிகளும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதற்கு பதில் அளித்த ப்ளூ சட்டை மாறன். " மாற்று அரசியல் என ஊரை ஏமாற்றி.. பிறகு திமுகவை மட்டுமே நொட்டை சொல்லி.. அதிமுக, பாஜக பற்றி வாய் திறக்காமல் சொம்பு தூக்கி.. வித்தை காட்டும் விஜய்க்கு ஜோரா கை தட்டுங்க" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வைஷ்ணவி: இப்படியான நிலையில் கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற தவெக பெண் உறுப்பினர், தான் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் மனதை கல்லாக்கிக்கொண்டு". இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றே தான். இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலறாதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து. கடந்த "மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்". என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து. கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள்.தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். சிறுவயதில் இருந்து நான் சிறுகச் சிறுக சேமித்த ரூ.5 லட்சம் பணத்தை மக்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் பல நலத்திட்ட உதவிகள் செய்து வந்தேன். ஆனால் கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன்.

தடை: மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்து, சென்னைக்குச் சென்று பொதுச் செயலாளரை சந்திக்கக் கூடாது. மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வரக்கூடாது. பொதுச் செயலாளரை சந்திக்க மேடை ஏறினால் "மனிதச் சங்கிலியால் நுழையவிடாமல் கீழே தள்ளிவிட்டது". மாவட்ட நிர்வாகிகளை மீறி கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகங்களில் நேர்க்காணல் கொடுக்கக்கூடாது, சமூக வலைதளங்களில் நீங்கள் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது.

பதவி வேண்டாம்: "உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது"."மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள் அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது" என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு. கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தேன். இருப்பினும் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கட்சியின் வளர்சிக்காக என்னை சுதந்திரமாக மக்களைச் சந்திக்க விடுங்கள் என்று மட்டும் தான் கோரிக்கை வைத்தேன் ஆனால் அதற்கும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கண்ணீர்: ஏன் என்னை நிராகரிக்கிறீர்கள்", "நான் என்ன தவறு செய்தேன் என கண்ணீர் மல்க கேட்டபோது எனக்கு கிடைத்த பதில், "நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ... என்று சொல்லி நிராகரித்தார்கள். ஒரு பெண் சமூக பிரச்சனையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் "நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி" என வசம்பு வார்த்தைகளால் நசுக்குபடுவது அனைவரும் அறிந்ததே.

விலகல்: என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை, என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்". கட்சிக்கு உண்மையாக என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார். இவரது பதிவைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், “ தாடி பாலாஜி மற்றும் சௌந்தர் ராஜா போன்ற நடிகர்களிடம் தொடர்ந்து நிருபர்கள் பேட்டி எடுத்ததால்.. அவர்கள் மீது பொறாமை கொண்ட புஸ்ஸி ஆனந்த் அதன்பிறகு இருவரையும் மேடையேற்றாமலும், விஜய்யை சந்திக்க விடாமலும் செய்ததாக குற்றச்சாட்டு வந்தது. தன்னை புஸ்ஸி ஆனந்த் ஓரம்கட்டுவதாக தாடி பாலாஜி பேட்டியும் தந்தார். தற்போது இந்தப் பெண்ணுக்கும் பிரச்னை முளைத்துள்ளது” என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X