அந்த 210 கோடி புருடாவை மட்டும் மன்னிக்கவே முடியாது.. வாரிசு வசூலை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: லைகா நிறுவனம் சொல்லிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பலரும் தில் ராஜு வெளியிட்ட 210 கோடி வசூல் போஸ்டரை ஜீரணிக்க முடியாமல் கதறி வருகின்றனர்.

தயாரிப்பாளர்களே ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என இயக்குநர் வினோத் சிரித்துக் கொண்டே திடீரென பேசியது எல்லாம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், வாரிசு படம் பொங்கல் வின்னர் தான். ஆனால், 210 கோடி ரூபாய் புருடாவை மட்டும் மன்னிக்க முடியாது என ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

எல்லாமே பொய்யா கோபால்

எல்லாமே பொய்யா கோபால்

கடந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் படம் 400 கோடி வசூல் செய்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் 1000 கோடியை கடந்தது. கடந்த ஆண்டு வலிமை, பீஸ்ட் 200 கோடியை கடந்தது என எல்லாமே பொய்யா கோபால் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

வெளிப்படை தன்மை இல்லை

வெளிப்படை தன்மை இல்லை

வெளிநாடுகளில் இருப்பது போல பாக்ஸ் ஆபிஸ் வசூல், நடிகர்களின் உண்மையான சம்பளம் என எதிலும் இங்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பது தான் இத்தனை கலவரங்களுக்கும் காரணம் என நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பொங்கல் வின்னர் வாரிசு

பொங்கல் வின்னர் வாரிசு

நடிகர் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் இந்த பொங்கலுக்கு போட்டிப் போட்டு ரிலீஸ் ஆன நிலையில், வசூல் ரீதியாக தமிழ்நாட்டிலும் உலகளவிலும் விஜய்யின் வாரிசு தான் முன்னிலையில் உள்ளதாக பல டிராக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் வாரிசு திரைப்படத்தை விட 15 கோடி மட்டுமே குறைவாக உள்ளதாகவும் அந்த படமும் நல்ல வசூலை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

210 கோடி புருடா

210 கோடி புருடா

"Varisu (serial) wins the pongal race. துணிவை விட வாரிசை காண குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததே முக்கிய காரணம். முழுமையான வசூல் நிலவரம் தெரிய மேலும் சில நாட்கள் ஆகலாம். ஆனா அந்த 210 கோடி போஸ்டர் டிசைன் புருடாவை மட்டும் மன்னிக்கவே முடியாது." என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் போட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.

தில் ராஜு அமைதி

தில் ராஜு அமைதி

வாரிசு திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி வசூல் சாதனை செய்ததாக அதிகாரப்பூர்வ போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில், இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை விஜய் படம் என்பதால் பொய்யான வசூல் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. வாரிசு திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில், அடுத்த கட்ட போஸ்டரை கெத்தாக தில் ராஜு வெளியிட்டு பதிலடி கொடுப்பாரா இல்லை அப்படியே அமைதியாக இருந்து விடுவாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..

தியேட்டர்களுக்கு சம்மன்

தியேட்டர்களுக்கு சம்மன்

நள்ளிரவு காட்சிகள், சிறப்பு காட்சிகள் அரசின் அனுமதியை மீறி 30க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வெளியிட்டுள்ள நிலையில், அந்த தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாகவே பல திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சிகள் என்கிற பெயரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை பாயுமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X