Blue Sattai Maran Veeran Review: சூப்பர் ஹீரோ இல்லை.. மொக்கை ஹீரோ.. ப்ளூ சட்டையின் வீரன் விமர்சனம்!

சென்னை: தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஹீரோ படங்களுக்கும் செட்டே ஆகாது போலத்தான் தெரிகிறது.

நடிகர் விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை பலரும் சூப்பர் ஹீரோக்களாக அவதாரம் எடுத்தும் படங்கள் ஓடவில்லை. இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி உள்ள வீரன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன.

ஆனால், ப்ளூ சட்டை மாறன் அதெல்லாம் இல்லைங்க இது ஒரு மொக்கை ஹீரோ படம்ங்க என தனது ஸ்டைலில் விளாசித் தள்ளி உள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Blue Sattai Maran slams Veeran movie in his Review

வீரன் வசூல்: ஹிப் ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் பட்ஜெட் 5 கோடி ரூபாய் என்றும் முதல் வாரத்தின் முடிவிலேயே 3 முதல் 4 கோடி வசூல் ஆகி விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவில் மொக்கை படம் என்றே க்ளீன் போல்டு செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: கமர்ஷியல் படங்கள் கொஞ்சம் சரியாக இல்லை என்றாலும், அடித்து நொறுக்கி விடும் ப்ளூ சட்டை மாறன் ஹிப் ஹாப் ஆதியின் சூப்பர் ஹீரோ படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனத்தை பற்றி எல்லாம் சொல்லவா வேண்டும் என்பதை போலத்தான் விளாசி எடுத்துள்ளார்.

வீரன் கோயில் அருகே சென்றுக் கொண்டிருக்கும் போது இடி தாக்க ஹீரோ குமரனுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. தனது கிராமத்தை வில்லன் வினய் அழிக்கப் போவதை கனவு மூலமாக அறியும் சூப்பர் சக்தி கொண்ட ஹிப் ஹாப் ஆதி தனது கிராமத்துக்கு மீண்டும் வந்து வில்லனை எப்படி எதிர்க்கிறார் என்கிற கதையை இழுவையாக செய்து ரசிக்கும்படியாகவே கொடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.

மொக்கை ஹீரோ: இது சூப்பர் ஹீரோ படம் என சொன்னார்களே என நம்பிப் போய் உட்கார்ந்தால் இது சுமாரான ஹீரோ படமாக கூட இல்லாமல் மொக்கை ஹீரோ படமாக உள்ளது என வறுத்தெடுத்துள்ளார்.

Blue Sattai Maran slams Veeran movie in his Review

காமெடி என்கிற பெயரில் இரண்டு இரண்டு பேராக வந்து நின்றுக் கொண்டு ஸ்டாண்டப் காமெடி செய்கின்றனர். ஆனால், சிரிப்பு தான் வரவில்லை. வில்லன் போர்ஷன் அதை விட மோசம். வில்லன் தம்பி என காட்டும் நபர் எல்லாம் காமெடியின் உச்சம். மொத்தத்தில் வீரன் படத்தை தைரியமாக தியேட்டருக்கு சென்று முழுமையாக பார்ப்பவர்கள் தான் வீரன் என சொல்லி சோலியை முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X