சொல் புத்தி இல்லையா.. விஜய் படத்தை போல ரசிகர்களை பாய்ண்ட் புடிச்சு விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரம் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தைப் போல இல்லாமல், இவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களால் பொது மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சன் நியூஸ் சேனலின் வீடியோவைப் பகிர்ந்து, விஜய் ரசிகர்களுக்கு சுய புத்தி இல்லை என்றால் பரவாயில்லை, சொல் புத்தியாவது இருக்க வேண்டாமா என்று விமர்சித்துள்ளார்.
கடந்த வாரத்தில் திருச்சிக்கு பிரச்சாரத்திற்கு வந்த விஜய்யைப் பார்க்க கூடிய அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், அருகில் இருந்த அரசு பள்ளியின் கழிவறையை மிகவும் மோசமாக மாற்றியது மட்டும் இல்லாமல், மேற்கூரைகளை உடைத்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுட்டிக்காட்டி இருந்தார். இப்படி இருக்கும்போது, நாகை மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு வந்த விஜய்யைப் பார்க்க கூடிய ரசிகர்கள், வேளாங்கன்னி ஆலயத்துக்குச் சொந்தமான மண்டபத்தின் மதில் சுவரை இடித்து தள்ளியுள்ளனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் உலா வந்து கொண்டு உள்ளது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இப்படி இருக்கும்போது விஜயைப் பார்க்க ஆவலாக கூடிய அவரது ரசிகர்கள், கோவில் மீது எல்லாம் ஏறி உள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒரு விடியோவைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், " வலதுபுறம் உள்ளவன் கோபுர சிலையில் ஷூ அணிந்து நிற்கிறான். சுயபுத்தி இல்லாவிட்டால்.. சொல்புத்தியாவது இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது மக்களின் அதிருப்தியை பெறுவது உறுதி.வலதுபுறம் உள்ளவன் கோபுர சிலையில் ஷூ அணிந்து நிற்கிறான்" என்று விமர்சித்துள்ளார். அவரது விமர்சனத்தைப் பார்த்த பலரும் ப்ளூ சட்டை மாறன் விஜய் படத்தை மட்டுமல்லாமல், விஜய் ரசிகர்களையும் பாய்ண்ட் புடிச்சு விமர்சிக்கிறாரே என்று பதிவிட்டு வருகிறார்கள்.
வேல்: நாகையில் விஜயைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். வழக்கம்போல் கட்சித் துண்டுகளை தூக்கி அவரை நோக்கி வீசினார்கள், இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் அவருக்கு மாலை வாங்கிக் கொண்டுவந்து அவரது வாகனத்தின் மீது வீசினார்கள். மேலும் தமிழ் கடவுள் முருகரின் ஆயுதமான வேலை , சுமார் 6 முதல் 7 அடிக்கு அளவிலான வேல் செய்து கொண்டு வந்திருந்தார்கள். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் கட்டி, விஜய்யிடம் அவர்கள் கொடுக்க, அவரும் அதை வாங்கிக் கொண்டு நின்றார். உடனே அங்கு கூடி இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். கையில் வேலுடன் இருந்த விஜய்யை பார்த்து அவரது ரசிகர்கள், தலைவர் முருகர் மாதிரியே இருக்காருப்பா என்று பேசி வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சீமான்: ரசிகர்கள் விஜய்க்கு வேல் கொடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோடு தொடர்பு படுத்தி ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அவரது பதிவில், “சீமான் அண்ணனின் முப்பாட்டன் முருகனின் வேல். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக்குரல். அண்ணன் சாதாரணமாவே விஜய்க்கு எதிரா சலங்கை கட்டி ஆடுவாரு. இப்ப அவரோட ஆயுதங்களை விஜய் கைல எடுத்தா விடுவாரா? அனல் கக்க ப்ரெஸ்மீட் தரப்போறாரு” என்றும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











