அலுமினியக் கிளிப்.. விஜய்யை விளாசிய பிரபலம்.. படத்தைத்தான் அந்த அடி அடிக்குறார்னா பாலிடிக்ஸிலுமா?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. இப்படி இருக்கையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யை பிரபல சினிமா விமர்சகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் அட்டாக் செய்து பதிவிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைதளத்தில் கடந்த சில தினங்களாவே ஒரு வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது. அது தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ அர்ஜுனாவின் வீடியோ தான். அதில் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விஜய் உடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்கிறார். அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கையில் துண்டுச்சீட்டு இல்லாமல், அவரது அமைச்சர் சகாக்கள் இல்லாமல் ஒரே மேடையில் எங்கள் தலைவர் விஜய் உடன் விவாதிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இவரது இந்த கேள்விக்கு திமுகவினர் ஒருபுறம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதற்காக குறிப்பு எடுத்து பேசும் துண்டுச் சீட்டினை ஆதவ் அர்ஜுனா மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியதால், திமுகவினர் ஆதவ் அர்ஜுனாவை மட்டும் இல்லாமல் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் நடிகர் விஜய் சமீபத்தில் சேலத்தில் பேசிய போது, அவருக்கு முன் அவரது உரை வைக்கப்பட்டிருந்தது. அது வைக்கப்பட்ட அட்டையில் இருந்து, வீசும் காற்றில் அவரது உரை அடங்கிய பேப்பர்கள் பறந்து விடக் கூடாது என்பதற்காக அந்த அட்டையுடன் அலுமினிய கிளிப் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், " துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் பேச தயாரா? - ஆதவ் அர்ஜூனா சவால். A4 பேப்பர்களில் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்கிரிப்டை பார்த்து விஜய் பேசும் காட்சி. காற்றில் பேப்பர்கள் பறந்தால்.. பேச நினைத்தது மறந்து போகும் என்பதால் இரண்டு வலுவான அலுமினிய கிளிப்கள் சொருகப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு: அவரது இந்த போஸ்ட்க்கு விஜய் ரசிகர்கள் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், திமுக தரப்பில் ஆதரவு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் சில இணையவாசிகளோ, படத்தைத் தான் போட்டு அந்த அடி அடிக்கிறீங்கனு பார்த்தா, பாலிடிக்ஸிலும் போட்டு இந்த அளவுக்கு அடிக்கிறீங்களே என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











