Vijay: அரசியலில் ஈயம் பூசிட்டு இருக்கும் விஜய்.. ஆதாரத்தோடு விளாசும் ப்ளூ சட்டை மாறன்!

zசென்னை: நடிகர் விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கினார். 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில்தான் தனது கட்சி தேர்தல் களத்தில் குதிக்கப்போகின்றது எனவும் அறிவித்தார். அத்தோடு தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விஜய் கட்சி தொடங்கி 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது அரசியல் செயல்பாடுகள், அரசியலில் ஈயம் பூசுவதைப்போல் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறனின் எக்ஸ் தளப்பதிவுகள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, "இன்று: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு , பெண்கள் பாதுகாப்பு, புயல் நிவாரணம் உள்ளிட்டவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தார் விஜய். அன்று: த.வெ.க.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக இருப்பதால் ஆளுநர் பதவி தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. மாநில அரசின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். What bro? Why this..confusing politics bro?

blue sattai maran vijay tvk

அண்ணா பல்கலை சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் மீடியாவை சந்தித்து பேட்டி தருகிறார்கள். வீதிக்கு வந்து போராடுகிறார்கள். த.வெ.க.தலைவர் பேட்டியும் தரவில்லை. போராடவும் இல்லை. வழக்கம்போல சம்பிரதாய அறிக்கை மட்டுமே வருகிறது. இன்று (டிசம்பர் 30) ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறாராம். ஏற்கனவே உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இதற்கென மூன்று பெண் காவல் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்துள்ளது. இதன்பிறகு இவர் மனு அளிப்பதால் என்ன நடக்குமென நினைக்கிறார்? என்ன ப்ரோ.. உங்க அரசியல் இப்படி இருக்கு?

பகவத் கீதை: மெர்சல் படத்தில் GST வசனம் மூலம் பாஜகவை மறைமுகமாக கிண்டலடித்தார் விஜய். அதற்கு அக்கட்சியினர் கடும் எதிரப்பு தெரிவித்தனர். அதன்பிறகு ரெய்டு வந்தது. பிறகு.. சர்கார் ஆடியோ லாஞ்சில்...ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும். கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்மினார். விக்கிரவாண்டி மாநாட்டில் பகவத்கீதை நூலை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டார். மாநாட்டில் 95% திமுகவை மட்டும் தாக்கினார். பிளவுவாத சக்தி என மேம்போக்காக ஈயம்பூசினார் (பாஜகவை கண்டித்து விட்டாராம்).. அம்பேத்கர் நூல் வெளியீட்டில் காஞ்சி மகா பெரியவரை நல்லவர் என ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார். ரமணர், சாய்பாபா உள்ளிட்ட பல துறவிகள் இருந்தும் அவர்களில் ஒருவரின் பெயரையும்
சேர்த்து குறிப்பிடவில்லை.

blue sattai maran vijay tvk

அரசியல் எதிரி: அதன்பிறகு பேச வந்த விஜய்யும் இதுபற்றி எதுவும் பேசவில்லை. அந்நிகழ்ச்சி யில் வழக்கம்போல திமுகவை மட்டும் சாடினார் விஜய். திமுகவை விஜய் விமர்சிக்க ஆரம்பித்தது முதல்... இன்று ஆளுநரை சந்தித்தது வரை... விஜய்யை உடனுக்குடன் பாஜக தலைவர்கள்தான் அதிகம் பாராட்டுகிறார்கள். தனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என மாநாட்டில் முழங்கிய விஜய்...

blue sattai maran vijay tvk

பாஜக B டீம்: நிஜத்தில் திமுகவிற்கு எதிராக மட்டுமே கத்திச்சண்டை போடுகிறார். எங்கே தன்னை பாஜகவின் B டீம் என சொல்லிவிடுவார்களோ என்பதற்காக லேசாக பாஜகவை கண்டிப்பதாக காட்டிக்கொள்வதாக தெரிகிறது. இரு கட்சிகளையும் சமமாக தராசில் வைத்து விமர்சிக்காதவரை... உங்களை பாஜகவின் B டீம் என்றே கருத வேண்டியுள்ளது. அதற்குத்தான் இத்தனை உதாரணங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue sattai maran vijay tvk

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X