Vijay X Maran: நீட் மட்டும் தான் உலகமா.. விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஜய் நீட் தேர்வு குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் மற்றும் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில் நீட் தொடர்பாக பேசினார். அவர் பேசுகையில், " படிப்பில் சாதிக்க வேண்டும் தான், படிப்பும் சாதனைதான். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக குறிப்பிட்ட ஒரே ஒரு படிப்பில் மட்டும் நாம் சாதித்து ஆக வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப யோசித்து கவலையை அதிகரித்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவுக்கு மன அழுத்தத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும் என எதுவும் இல்லை.

Blue Sattai Maran Slams Vijay s Speech About NEET Exam at TVK Function

நீட் மட்டும் தான் உலகமா? : இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், நீட் மட்டும் தான் உலகமா? நீட்டைக் கடந்து இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. எனவே இப்போதே உங்கள் மனதை மிகவும் வலுவாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை ஜனநாயகமாக வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகம் இருந்தால்தான் இந்த உலகமும் சரி, உலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும். பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் மீது அழுத்தத்தை எப்போதும் போட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

ஓட்டுக்கு பணம்: உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் வழி நடத்துங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன். அவரவர்களுக்கு பிடித்த துறையில் எத்தனை தடைகள் வந்தாலும் சாதித்து காட்டுவார்கள். நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கல்வி விருது விழாவில் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் கலாச்சாரம் குறித்து பேசினேன். அடுத்த ஆண்டில் வண்டி வண்டியாக உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். ஆனால் ஊழல் செய்யாதவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்" என்று பேசினார்.

ப்ளூ சட்டை மாறன்: விஜய்யின் இந்த பேச்சில் நீட் குறித்து அவர் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு நீட் தேர்வுக்கு ஆதரவாக இருப்பது போல இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த வரிசையில் திரைப்பட இயக்குநர் மற்றும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய் நீட் தேர்வு குறித்து பேசியதை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், " விஸ்வகர்மா மூலம் குலத்தொழில் ஊக்குவிக்கப்படுகிறது - பாஜக. ஆடு, மாடு மேய்ப்பதை அரசு தொழில் ஆக்குவேன் - சீமான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு? வேறு படிப்பை படியுங்கள் என்பதன் polite version விஜய் பேசியது" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X