இளிச்சவாய் தயாரிப்பாளர்கள் உள்ளவரை இவர்களின் சம்பளம் குறையாது.. விக்ரமை விளாசிவிட்ட ப்ளூசட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் சினிமாவில் பஞ்ச் டயலாக்குகள் நன்றாக உள்ளதோ இல்லையோ இசை வெளியீட்டு விழாக்களில் படத்தின் கதாநாயகர்கள் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்குத் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. இது மாத்திரம் இல்லாமல் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆவது இசை வெளியீட்டு விழா பஞ்ச் டயலாக்குகள் தான். எந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ஓவராக பேசுகிறார்களோ அந்த படம் கன்பார்ம் ஓடாது எனக் கூறும் அளவுக்குத்தான் கடந்த கால வரலாறுகள் இருந்துள்ளது.
அந்த வரிசையில் குபேரா படம் இணைந்து விடும் என இணையவாசிகள் சிலர் பேசிவருகிறார்கள். ஆனால் படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் இருக்காது என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது நடிகர் விக்ரம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேசுவது மறைமுகமாக இன்னொரு நடிகரை தாக்கிப் பேசி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி விஜய்யை தாக்கி பேசியதாக கூறப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது இருந்ததாகவும் பேசப்பட்டது.

நடிகருக்கு எதிரி நடிகர்: இப்படி இருக்கும்போது தமிழ் சினிமாவில் இந்த நடிகருக்கு அந்த நடிகர் எதிரி, அந்த நடிகருக்கு இந்த நடிகர் ஆகாது என்ற பனிப்போர் கதைகள் அதிகம் உலா வருகிறது. இப்படி இருக்கும்போது எதிரிகளே இல்லாத நடிகர் என்றால் அது விக்ரம் தான் எனவும் கூறப்படுகிறது. அதன்படி, ஒரு படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் அந்த நடிகரின் எதிரி நடிகராக உள்ள நடிகரின் ரசிகர்கள் தான் எனக் கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் எதிரியே இல்லாத விக்ரம் படங்கள் ஓடாததற்கு என்ன காரணம் என்ன என்று ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விக்ரம் தான் காரணம்: அவரது எக்ஸ் பதிவில், " நீ ஏம்ப்பா தனியா அழுதுட்டு இருக்க? பல வருசமா நான் நடிக்கற எந்தப் படமும் ஓடல சார். பழியை தூக்கி எவன் மேலயாவது போட்டு.. திட்டமிட்ட சதின்னு அழ வேண்டியதுதான?. எனக்கு எதிரியே இல்ல சார். என் படம் ஓடாததுக்கு நான்தான் காரணம்னு மக்கள் எப்பவோ உஷாராகிட்டாங்க" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
இளச்சவாய் தயாரிப்பாளர்கள்: இணைய வாசி ஒருவர், ' விக்ரம் அதிர்ஷ்டம் இல்லாத நடிகராக உள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் அவர் போடும் உழைப்பும் அர்பணிப்புக்கும் பல விருதுகள் அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். பல வெற்றிகள் அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்' என கமெண்ட் அடித்திருந்தார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் ஆமாம் என பதில் அளித்துள்ளார். அதேபோல் மற்றொருவர், விக்ரம் படங்கள் ஓடவில்லை என்றாலும் விக்ரம் படத்திற்கு படம் ரூபாய் 50 கோடிகள் சம்பளமாக வாங்கிக் கொள்கிறாரே என பதிவிட, அதற்கு ப்ளூ சட்டை மாறனோ," இளிச்சவாய் தயாரிப்பாளர்கள் உள்ளவரை இவர்களின் சம்பளம் குறையாது" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











