வெளங்குமடா தமிழ்நாடு.. விஜய்யின் நடிகையுடனான தொடர்பு? ஆதரித்த இளம் பெண்.. விளாசிவிட்ட ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய் ஒவ்வொரு முறை தனது கட்சியினரைச் சந்திக்க வருகிறேன் என்று வரும் போது எல்லாம் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகள் பகீர் கிளப்புவதாகக்த்தான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், விஜய்க்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று ரசிகர்கள் கூறும் கருத்துக்கள் பலருக்கும் ஷாக் கொடுத்து வருகிறது. விஜய் தஞ்சாவூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் பேசியது வேகமாக பரவி வருகிறது.

அதாவது விஜய்யின் மனைவி சங்கீதா, தான் விஜய்யுடன் வாழ விரும்பவில்லை என்றும், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். காரணம் விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். கண்டித்தும் திருந்தவில்லை. என்னிடத்தில் எல்லா ஆதாரங்களும் உள்ளது, எனவே திருமண பதிவை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது மட்டுமல்லாமல், அரசியல் தளத்திலும் பேசுபொருளாக உள்ளது.

Blue Sattai Maran Slams Who Vijay Fan Girl Who Supportive Comments About Vijay sbreach of marriage Relationship With Actress

இப்படி இருக்கையில் தஞ்சாவூர் கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகை ஒருவர், " குப்பை பொறுக்குபவனே இரண்டு பொண்டாட்டி வைத்துள்ளான். கூட்டுபவள் நாலு புருஷன் வைத்திருக்கா. காசு இருக்கிறவன் 10 பொண்டாட்டி வெச்சுக்குவான். எங்ககிட்ட காசு இருக்கு நாங்க வெச்சுக்குறோம். உங்களுக்கு என்ன?

இப்போது ஏன்: உங்களுக்கு தேவை அரசியல் தானே, ஓட்டுத் தானே? இந்த விஷயம் எங்களுக்கு எல்லாம் எப்போதோ தெரியும். சங்கீதாவுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கு போல. சங்கீதா முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து கொண்டு விஜய்க்கு எதிராக சதி செய்கிறார். எப்போதோ கண்டுபிடித்ததாக கூறும் சங்கீதா ஏன் தேர்தல் வரும் போது வந்து விவாகரத்து கேட்கிறார். இதற்கு முன்னாலே கேட்டிருக்கலாமே?" என்று பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் பேசி உள்ளார்.

Blue Sattai Maran Slams Who Vijay Fan Girl Who Supportive Comments About Vijay sbreach of marriage Relationship With Actress

ப்ளூ சட்டை மாறன்: இந்த இளம் பெண்ணின் பேச்சுக்கு இணையதளவாசிகள் பலரும் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இப்படி இருக்கையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " தவெகவின் மகளிர் ஆர்மி பேச்சுகள் அனைத்தும் அட்டகாசம். இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சங்கீதாவின் விவாகரத்து கோரிக்கை மனு வெளியானபோது விஜய் ரசிகை ஒருவர், " விஜய்க்கு நாங்க இருக்கோம், ஆயிரம் அக்கா இருக்கோம், ஆயிரம் தங்கச்சிங்க இருக்கோம். ஏன் பொண்டாட்டியாக கூட இருப்போம் உங்களுக்கு என்ன?" என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த இளம்பெண்ணின் பேச்சும் பரவலாக வேகமாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை ஆதரிக்கும் விதமாக இந்த பெண் பேசுகிறாரே என்று காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X