அப்போ இனிச்சுது இப்போ கசக்குதோ.. சுதா கொங்குராவை விடாது துரத்தும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தை ஒரு தரப்பினர், கொண்டாடினாலும் இணையத்தில் சில விஷமிகள் படம் தோல்வி என்றும், காத்து வாங்கும் தியேட்டர்கள் சோஷியல் மீடியாவில் பரவி வரும் செய்தியை சுதா கொங்கரா வன்மையாக கண்டித்தார். இதற்கு, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இயக்குநரை கடுமையாக விளாசி உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ஜனவரி 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், படத்திற்கு எதிராக தவறான விமர்சனங்கள் பரப்படுகிறது, இன்னும் சொல்லப்போனால் மோசமான வகையான அவதூறு பரப்பப்படுகிறது. இணையத்தில் ஒருவர் பராசக்தி படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவது விஷயமில்லை, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன்னிப்புச் சான்றிதழ் வாங்குங்கள், அப்போதுதான் படம் ஓடும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இது ஆரோக்கியமான சினிமா சூழல் இல்லை. ஒரு படத்திற்கு எதிராக பெயர் தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

பராசக்தி: இந்த மாதிரியான, ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது படக்குழுவாக நாங்கள் இதையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அது எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் யோசியூங்கள். அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். தியேட்டரில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது, புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது, இப்படி செய்வதெல்லாம் போட்டி இல்ல. இதைப்போலத்தான் கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இதையே தான் செய்தீர்கள் என சுதா கொங்கரா பேசி இருந்தார்.
அப்போ இனிச்சுதா : இயக்குநர் சுதா கொங்கராவின் இந்த பேச்சை கடித்துள்ள ப்ளூ சட்டை மாறன், படம் ஓடாவிட்டால்.. பழியை தூக்கி சோஷியல் மீடியாவினர் அல்லது விமர்சகர்கள் மீது போடுவது தமிழ் சினிமாக் காரர்களின் வழக்கம். படத்தில் நாம் என்ன தவறு செய்தோம் என சுயபரிசீலனை செய்ய மாட்டார்கள். இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை வரவேற்றபோது இனித்த மக்கள்.. இப்போது கசக்கிறார்கள் என சுதா கொங்குரா பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார், விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











