விஜய்க்கு மார்க்கெட் இல்லையா?.. திருமாவிடம் ப்ளூ சட்டை மாறன் கேள்வி.. கமல், உதயநிதியையும் இழுத்துட்டாரு!
சென்னை: திமுகவை எதிர்த்து விஜய் பேசும் போதெல்லாம் இடையில் வந்து திருமாவளவன் மாட்டிக் கொள்கிறார் என வின்னர் படத்தில் பிரசாந்துக்கு விரித்த வலையில் வடிவேலு சிக்கும் வீடியோவை போட்டு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ட்ரோல் செய்துக் கொண்டிருக்க, ப்ளூ சட்டை மாறன் இன்னொரு பக்கம் திருமாவளவனிடம் டைரக்ட்டாகவே அவர் நடித்த படத்தின் போஸ்டரை போட்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமாவில் காலாவதியான நடிகர்கள் அரசியல் பக்கம் வந்து எதையாவது பேசுவது வழக்கமாகி விட்டது என விஜய்யை கடுமையாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்நிலையில், நீங்களும் சினிமாவில் நடித்தவர் தானே என்றும் இதே போல கமல்ஹாசன் மற்றும் உதயநிதியை பார்த்து சொல்ல முடியுமா? என்றும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

அரசியல் களத்திற்குள் விஜய் அடியெடுத்து வைத்ததில் இருந்தே திருமாவளவன் மற்றும் சீமான் விஜய்க்கு எதிராக டைரக்ட் அட்டாக் செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர்.
கமல், உதயநிதி மீது வைத்தால்: "காலாவதியா? விமர்சனம் வைக்க பல காரணங்கள் உள்ளபோது.. இது தேவையற்றது. உண்மையற்றது. இன்றளவும் அவரது படங்கள்தான் வியாபாரத்தில் நம்பர் 1. இதே விமர்சனத்தை கமல் மற்றும் உதயநிதி மீது வைத்தால்.. உங்களிடம் பதில் உள்ளதா?" என ப்ளூ சட்டை மாறன் திருமாவளவன் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார்.

மாஸ் ஹீரோ திருமா: "சினிமாவில் காலாவதியான சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் - திருமா. உங்களுக்கு ஒரு காலத்துல மாஸ் ஹீரோவாகற ஆசை இருந்த மாதிரி.. அவங்களுக்கு அரசியல் ஆசை இருக்கக்கூடாதா?" என்றும் ப்ளூ சட்டை மாறன் அவர் நடித்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு கலாய்த்துள்ளார். சீமான், திருமாவளவன், உதயநிதி என பலரும் சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், இன்று விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததும் நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்றும் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது போல பேசுவது எப்படி சரியான வாதமாக இருக்கும் என்றும் விஜய்யை விமர்சிக்க மற்ற விஷயங்களே இல்லையா என்றும் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.



Click it and Unblock the Notifications











