Blue Sattai Maran:ஞானவேல் ராஜாவின் பேச்சைக் கேட்க யாரெல்லாம் காத்துருக்கீங்க? ப்ளு சட்டை மாறன் கலாய்
சென்னை: சினிமா விமர்சகர்களில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். அவர் ஒரு படத்தினை எப்படி விமர்சனம் செய்கின்றார் என்பதைப் பொறுத்து, படத்தினை தியேட்டரில் பார்க்கலாமா வேண்டாமா என ரசிகர்கள் முடிவெடுக்கும் அளவிற்கு, ஒரு இன்ஃபுளூயன்சராக உள்ளார். தொடக்கத்தில் சினிமா விமர்சகராக மட்டும் இருந்த ப்ளூ சட்டை மாறன் அதன் பின்னர், சினிமா நிகழ்வுகளையும் விமர்சிக்கத் தொடங்கினார். இப்படியான நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவினைக் கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய தயாரிப்பு நிறுவனங்களில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நிறுவனம் மிகவும் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை அதிகம் தயாரிக்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் உள்ளது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு மட்டும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில், தங்கலான் படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி ரூபாய் 100 கோடிகள் வசூலைக் குவித்தது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று கங்குவா படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் பார்த்த பலரும் படத்திற்கு கலவையான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர். மேலும் பலர் படம் மோசமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மீம் கிரியேட்டர்கள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா படத்தின் புரோமோசனின்போது என்னவெல்லாம் பேசி ஓவர் பில்டப் கொடுத்தார் என தேடி எடுத்து மீம் போட்டு கலாய்த்து வருகின்றார்கள்.
ஏமாற்றம்: படம் பார்த்த ரசிகர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்தரா மற்றும் கேரளாவுக்குச் சென்று படம் பார்த்த ரசிகர்கள் புலம்பித் தள்ளினர், என்பதை விடவும் திட்டித்தீர்த்தனர். பல விமர்சகர்களும் படத்தின் சி.ஜி மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். அதேபோல், படத்தில் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் நடிப்பு அட்டகாசமாக இருந்ததாக கூறிவருகின்றனர்.

கலாய்: இப்படியான நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டிகளிலும் புரோமோசன் நிகழ்ச்சிகளும், படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் படம் குறித்து ரொம்பவே ஓவர் பில்டப் கொடுத்தார். இதனால் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "நலன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் வா வாத்யார். தயாரிப்பு: ஸ்டுடியோ க்ரீன். இந்த பட ப்ரமோஷனில் ஞானவேல் சார் பேச்சை கேக்க யாரெல்லாம் காத்துருக்கீங்க?" என கலாயா பதிவிட்டுள்ளார். இதற்கு சிலர் தாங்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருப்பதாகவும், சிலர் ' ஞானவேல் ராஜா பேசாமல் இருப்பதுதான் வா வாத்தியார் படத்திற்கு நல்லது" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் பதிவு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நக்கல்: அதேபோல் ப்ளூ சட்டை மாறன் இதற்கு முந்தைய பதிவுகளில் கங்குவா படத்தினையும் படக்குழுவையும் கலாய்த்து பதிவிட்டிருந்தார். அதுவும் ரசிகர்கள் மற்றும் இணையவசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ப்ளூ சட்டை மாறன், கங்குவா படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பதிவிட்டிருந்ததற்கு இணையவாசிகள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











